Thee Yazhini

தீ யாழினி, ஏய்
தன் மௌன வாளை கொண்டே
நெஞ்சை கொஞ்சம் கீறினாள்
தீ யாழினி
என் ஆண்மையை ஏன்
கோரினாள் (ஏ-ஹே-ஹே-ஹே-ஹே)

ஏ-ஏனோ
என்னை, என்னை எரிக்கிறாள்?
ஏ-ஏனோ
தள்ளி நின்று சிரிக்கிறாள்?
தீண்டாமல், மோகத்தின் உச்சத்தை தந்தாள்

ஏ-ஏனோ
விரகங்கள் விதைக்கிறாள்?
ஏ-ஏனோ
உயிருடன் புதைக்கிறாள்?
நான் காணா அச்சத்தை, அச்சத்தை தந்தாள் (ஹா)

ஓஹ, உடையாகி கிழியும் நெஞ்சம்
இடையோடு வழியும் பார்வை
வெளியேற மொழியும் அஞ்சும்
குளிரோடு பொழியும் வேர்வை
என் போதைகள் யாவுமே
வீணென ஆக்கினாள்
கல் ஊரும் சொல்லை
கொண்டே மயக்கினாள் (ஏ-ஹே-ஹே-ஹே-ஹே)

ஏ-ஏனோ
என்னை, என்னை எரிக்கிறாள்?
ஏ-ஏனோ
தள்ளி நின்று சிரிக்கிறாள்?
தீண்டாமல் மோகத்தின் உச்சத்தை தந்தாள்

ஏ-ஏனோ
விரகங்கள் விதைக்கிறாள்?
ஏ-ஏனோ
உயிருடன் புதைக்கிறாள்?
நான் காணா அச்சத்தை, அச்சத்தை தந்தாள்

ஏ, யாழினி



Credits
Writer(s): Madhan Karky Vairamuthu, Sam C.s.
Lyrics powered by www.musixmatch.com

Link