Thoda Thoda (From "Indira")

தொடத் தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன
தொடத் தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன

தொடத் தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன

அந்த இளவயதில் ஆற்றங்கரை மணலில்
காலடி தடம் பதித்தோம் யார் அழித்தார்
நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதற்பூவை யார் பறித்தார்
காதலர் தீண்டாத பூக்களில் தேன் இல்லை
இடைவெளி தாண்டாதே என் வசம் நான் இல்லை

தொடத் தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச் சுட நனைந்ததென்ன

பார்வைகள் புதிது ஸ்பரிசங்கள் புதிது
நரம்புகள் பின்ன பின்ன நடுக்கம் என்ன

தொடத் தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச் சுட நனைந்ததென்ன

பனி தனில் குளித்த பால் மலர் காண
இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்
பசித்தவன் அமுதம் பருகிட தானே
பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்
இலை மூடும் மலராக இதயத்தை மறைக்காதே
மலர் கொள்ளும் காற்றாக இதயத்தை உலுக்காதே

தொடத் தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச் சுட நனைந்ததென்ன

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன

தொடத் தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன



Credits
Writer(s): A.r. Rahman, P.k. Mishra
Lyrics powered by www.musixmatch.com

Link