Sollavaa - From "Mahaprabhu"

சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை

சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை
என் மூச்சிலும்... என் பேச்சிலும்
உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம்

சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை

தென்காசிச் சாரல் கூட நீயில்லாமல்
வைகாசி வெய்யில் போல வாட்டுதே

பன்னீரை தொட்டால் கூட நீயில்லாமல்
வென்னீரை போல வெப்பம் காட்டுதே

மை அளந்த கண்ணும்
என் கையளந்த பெண்ணும்
மின்சாரம் பாய்ச்சுமா

கள்ளிருக்கும் கிண்ணம்
என்னுள்ளிருக்கும் வண்ணம்
உன் பார்வை பார்க்குமா

பக்கம் வா பக்கம் வா
பள்ளிப் பாடம் சொல்ல வா

அப்பப்பா தப்பப்பா இது முதல் இரவா

சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை
என் மூச்சிலும்... என் பேச்சிலும்
உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம்

சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை

உன் பேரைச் சொல்லிச் சொல்லி கூந்தல் மீது
அன்றாடம் முல்லைப் பூவைச் சூடுவேன்

சிங்காரப் பெண்ணை என்றும் நீங்கிடாது
சிற்றாடை போலே வந்து கூடுவேன்

செம்பருத்தி ஒன்று
உன் சிந்தைக்குள்ளே நின்று
சல்லாபம் தேடுதோ...

சங்கமங்கள் கண்டு
உன் அங்கங்களில் இன்று
செந்தேனும் ஓடுதோ...

இன்பங்கள் என்னென்று சொல்ல வார்த்தை இல்லையே

இன்றைக்கும் என்றைக்கும் இனி பிரிவில்லையே

சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை
என் மூச்சிலும்... என் பேச்சிலும்
உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம்

சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை



Credits
Writer(s): Deva
Lyrics powered by www.musixmatch.com

Link