Nila Kayum

நிலா காயும் நேரம் சரணம்
உலாப்போக நீயும் வரணும்
பார்வையில் புதுப்புது கவிதைகள் மலர்ந்திட காண்பவை யாவுமே தேன்
அன்பே நீயே அழகின் அமுதே

தென்றல் தேரில் நான் தான் போகும் நேரம் பார்த்து
தேவர் கூட்டம் பூத்தூவி பாடும் நல்ல வாழ்த்து
கண்கள் மூடி நான் தூங்க திங்கள் வந்து தாலாட்டும்
காலை நேரம் ஆனாலே கங்கை வந்து நீராட்டும்
நினைத்தால் இது போல் ஆகாததேது
அணைத்தால் உனைத்தான் நீங்காது பூ மாது
நெடு நாள் திருத்தோள்எங்கும் நீ கொஞ்ச

அன்பே நீயே அழகின் அமுதே - (2)

மின்னல் நெய்த சேலை மேனி மீது ஆட
மிச்சம் மீதி காணாமல் மன்னன் நெஞ்சம் வாட
அர்த்த ஜாமம் நான் சூடும் ஆடை என்றும் நீயாகும்
அங்கம் யாவும் நீ மூட ஆசை தந்த நோய் போதும்
நடக்கும் தினமும் ஆனந்த யாகம்
சிலிர்க்கும் அடடா ஸ்ரீதேவி பூந்தேகம்
அனைத்தும் வழங்கும் காதல் வைபோகம்



Credits
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link