Azhakooril

அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சாய்த்தவளே
மழையூரின் சாரலிலே
என்னை மார்போடு சேர்த்தவளே

உனை அள்ளித்தானே
உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து
உதிராமல் காப்பேன்

அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சாய்த்தவளே

நீ உடுத்தி போட்ட உடை என் வயதை மேயுமடா
நீ சுருட்டி போட்ட முடி
மோதிரமாய் ஆகுமடி

இமையாலே நீ கிருக்க
இதழாலே நான் அழைக்க
கூச்சம் இங்கே கூச்சப்பட்டு போகிறதே

சடையாலே நீ இழுக்க
இடைமேலே நான் வழுக்க
காய்ச்சலுக்கும் காய்ச்சல் வந்து வேகிறதே

என்னை திரியாக்கி
உன்னில் விளக்கேற்றி
எந்நாளும் காத்திருப்பேன்

ஹோய் ஹோய் அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சாய்த்தவளே

நீ முறிக்கும் சோம்பலிலே நான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன்
நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே
நான் இறங்கி தூங்கிடுவேன்

குறிலாக நான் இருக்க
நெடிலாக நீ வளர்க்க
சென்னை தமிழ்
சங்கத்தமிழ் ஆனதடி

அறியாமல் நான் இருக்க
அழகாக நீ திறக்க
காதல் மழை ஆயுள் வரை தூருமடா

என்னை மறந்தாலும்
உன்னை மறவாத நெஞ்சோடு நானிருப்பேன்

ஹோய் ஹோய் ஹோய் அன்பூரில் பூத்தவனே
ஹ்ம்ம் ஹ்ம்ம் என்னை அடியோடு சாய்த்தவளே
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் மழையூரின் சாரலிலே
ஹ்ம்ம் ஹ்ம்ம் என்னை மார்போடு சேர்த்தவளே

உனை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்



Credits
Writer(s): R Vairamuthu, Vidyasagar
Lyrics powered by www.musixmatch.com

Link