Solladi

சொல்லடி எந்தன் இதயம் எனதா... உனதா...
நில்லடி நீ செய்வது சரியா... சரியா...

உன் தோட்டத்துப் பூவா என் இதயம்... என் இதயம்...
நீ போகின்ற போக்கில்... பறித்தாயே, பறித்தாயே...
உன் கிணற்றில் உள்ள நீரா... என் இதயம்... என் இதயம்...
நீ நினைத்து நினைத்து வாறி இறைத்தாயே...
இறைத்தாயே... ஓஹோ...

சொல்லடி எந்தன் இதயம் எனதா... உனதா...
நில்லடி நீ செய்வது சரியா... சரியா...

உன் கட்டில் மெத்தையே என் இதயமா சொல்...
சுகமாக படுத்து நீயும் உருண்டாயே...
உந்தன் புத்தகத்தின் முதல் பக்கம் என் இதயமா சொல்...
உன் பெயரை எழுதிவிட்டு போனாயே...

உன் கூந்தல் காட்டில் ஒளியும் ஒரு குழலா எந்தன் இதயம்
ஒரே முடிச்சில் என்னை அள்ளி புதைத்தாயே புதைத்தாயே
உன் வீட்டின் முற்றத்தின் மேல் விழும் மழையா எந்தன் இதயம்
ரசித்த பின்னால் ஜன்னல் சாற்றிப் படுத்தாயே...

சொல்லடி எந்தன் இதயம் எனதா... உனதா...
நில்லடி நீ செய்வது சரியா... சரியா...

உன் நெற்றியின் வேர்வைத் துளியாய் போராடும் எந்தன் இதயம்
ஒற்றை விரலில் என்னை சுண்டி எரித்தாயே அடியே
உன் கை கடிகாரத்தில் ஓடுகின்ற முள்ளாய் என் இதயம்
ஒரே பார்வை வீசி பின்னர் மறந்தாயே

நீ போடும் வாசல் கோலம் அது தானா எந்தன் இதயம்
ஒரு சில கோடுகளால் என்னை வளைத்தாயே
உன் காலை தாங்கும் செருப்பா போராடும் எந்தன் இதயம்
ஊரெங்கும் சுற்றி வாசலில் கழற்றி வைத்தாயே...

சொல்லடி எந்தன் இதயம் எனதா... உனதா...
நில்லடி நீ செய்வது சரியா... சரியா...

உன் தோட்டத்துப் பூவா என் இதயம்... என் இதயம்...
நீ போகின்ற போக்கில்... பறித்தாயே, பறித்தாயே...
உன் கிணற்றில் உள்ள நீரா... என் இதயம்... என் இதயம்...
நீ நினைத்து நினைத்து வாறி இறைத்தாயே...
இறைத்தாயே... ஓஹோ...



Credits
Writer(s): Vijay Antony, Thamarai
Lyrics powered by www.musixmatch.com

Link