Thanga Nilavukkul

தங்க நிலவுக்குள் நிலவொன்று
மலருக்குள் மலர் என்று வந்ததே
எந்தன் கனவுக்குள் கனவொன்று
நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததே

கொடி முல்லை கொடி கட்டும் மன்னனோ
இன்பச் சிறை பட்டு திரை இட்ட கண்ணனோ
கொடி முல்லை கொடி கட்டும் மன்னனோ
இன்ப சிறை பட்டு திரை இட்ட கண்ணனோ

நிலவுக்குள் வண்ண மலருக்குள்
தங்க நிலவுக்குள் நிலவொன்று
மலருக்குள் மலர் என்று வந்ததே
எந்தன் கனவுக்குள் கனவொன்று
நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததே

முத்துக்கள் கொட்டிய நட்சத்திரம்
அந்த நட்சத்திரம் என் பக்கம் வரும்
வித்துக்கள் கட்டிய முத்துச் சரம்
என் பக்கம் வந்து பொன் முத்தம் தரும்

ஒரு முத்துத்தான் உடைபட்டுத்தான் பூவாய் மாறும்
அதைத் தொட்டுத்தான் அணை கட்டித்தான் பாடும் ராகம்
வண்ணச் சிலை பெற்றுத் தரும் அன்புச் சின்னக்கிளி
கலை கற்றுத் தரும் அந்த வண்ணக்கிளி
சிந்திடாமால் வந்த தேனே சொந்தமானேன் நான்

நிலவுக்குள் வண்ண மலருக்குள்
தங்க நிலவுக்குள் நிலவொன்று
மலருக்குள் மலர் என்று வந்ததே
எந்தன் கனவுக்குள் கனவொன்று
நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததே

இந்த பூவைக்கு பூ வைத்து சூடிடும் மாமனுக்கு
நல்ல தோகையின் தோகையில் சொக்கிடும் மாமனுக்கு
அன்புக்கும் பங்கிற்கு ஆள் வரப் போகுது
அம்மா என் அப்பா என்றாட்டிடப் போகுது

வெட்கத்தில் மின்னிடும் தங்கக் குடம்
அது தொட்டு தரும் உன் சொர்க்கம் வரும்
கற்பனை கட்டிய முல்லைச்சரம்
எனை கட்டிக் கொள்ள தன் கையைத் தரும்

பல வண்ணம் தான் ஒரு எண்ணம் தான் பாலாய் ஊறும்
ஒரு செல்லம் தான் இவன் செல்வன் தான் நாளை தோன்றும்
கன்னம் தனில் சின்னம்பல என்று எண்ணித் தரும்
இன்னும் பல இன்பங்களை சொல்லித் தரும்
முத்து மாலை நித்தம் போட சித்தமானேன் நான்

நிலவுக்குள் வண்ண மலருக்குள்
தங்க நிலவுக்குள் நிலவொன்று
மலருக்குள் மலர் என்று வந்ததே
எந்தன் கனவுக்குள் கனவொன்று
நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததே

கொடி முல்லை கொடி கட்டும் மன்னனோ
இன்பச் சிறை பட்டு திரை இட்ட கண்ணனோ
கொடி முல்லை கொடி கட்டும் மன்னனோ
இன்ப சிறை பட்டு திரை இட்ட கண்ணனோ

நிலவுக்குள் வண்ண மலருக்குள்
தங்க நிலவுக்குள் நிலவொன்று
மலருக்குள் மலர் என்று வந்ததே
எந்தன் கனவுக்குள் கனவொன்று
நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததே



Credits
Writer(s): Gangai Amaren, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link