Avizhaai - Madras Gig Season 2

உடல் விட்டு உடை விட்டு வெளியே
விடைகொள் உயிரே
அடைபட்ட சதைச்சிறை உடைத்தே
உயிர்கொள் உயிரே

அவிழாய் அவிழாய் இதயம் அவிழாய்
நெகிழாய் நெகிழாய் இறுக்கங்கள் நெகிழாய்
ஏற்றுக்குறியாய் இங்கு நீயில்லையே
அல்குல் முலையாய் இங்கு நான் இல்லையே
ஆடை துறந்தும் நிர்வாணம் இல்லை
மெய் நீங்கியும் இங்கு மரணம் இல்லை
ஆகையால் ஆடு என்னோடு யாவுமே மறந்து
ஆகையால் ஆடு என்னோடு ஆடலே மருந்து

மகிழாய் மகிழாய் மயக்கங்கள் மகிழாய்
நிகழாய் நிகழாய் நொடியாய் நிகழாய்
எழுந்திடும் அலையென விழுந்திடும் மழையென அழுதிடும் முகிலென ஆடு
அதிர்ந்திடும் நிலமென உதிர்ந்திடும் மலரென எதிர்த்திடும் புயலென ஆடு
காதல் காமம் எல்லாம் உன் காலடியில் போட்டு
ஆடும் போது நீயும் கடவுள் என்று காட்டு
நீயே உந்தன் தாளம்
நீயே உந்தன் மேடை
நீயே உந்தன் விசிறி வேறு யாரும் இல்லை
ஆகையால் ஆடு என்னோடு யாவுமே மறந்து
ஆகையால் ஆடு என்னோடு ஆடலே மருந்து

அவிழாய் அவிழாய் முழுதும் அவிழாய்
நெகிழாய் நெகிழாய் மெழுகாய் நெகிழாய்
முத்தம் உரசல் இங்கு வீண்தானடா
முற்றும் துறந்தால் நான் வான் தானடா
ஆணா பெண்ணா நான் ரெண்டும் இல்லை
பால் என்பதே இனி தேவையில்லை

ஆகையால் ஆடு என்னோடு யாவுமே மறந்து
ஆகையால் ஆடு என்னோடு ஆடலே மருந்து



Credits
Writer(s): Madhan Karky Vairamuthu, B Shiva Prakash
Lyrics powered by www.musixmatch.com

Link