Aazhi Soozhndha

ஆழி சூழ்ந்த உலகிலே
யாவும் அழகாச்சே
வயதை மீறிய வாழ்விலே
சிறு கவிதை உருவாச்சே

விரலினை தாண்டிடும்
நகமென இவன் பாசமே
கிரீடமா பாரமா
புரியுமா சில நேரமே

இவன் அண்ணன் பாதி
தந்தை மீதி
ஆனானே ஆனானே
தம்பி என்ற
நிலையை கடந்து
போனானே போனானே

ஆழி சூழ்ந்த உலகிலே
யாவும் அழகாச்சே
வயதை மீறிய வாழ்விலே
சிறு கவிதை உருவாச்சே

உறங்கும் போதும்
இவனின் கவனம் உறங்கி போகாது
கனவில்கூட காவல் செய்யும்
கடமை மறவாது

உலகமே இவளென இவன் வாழும் அழகை பாரடா
மகள் என வளர்க்கிறான்
இவன் உயரம் குறைந்த தாயடா

இவனின் அன்பை அளந்திட
எந்த மொழியும் போதாது

இவன் அண்ணன் பாதி
தந்தை மீதி
ஆனானே ஆனானே
தம்பி என்ற
நிலையை கடந்து
போனானே போனானே

ஆழி சூழ்ந்த உலகிலே
யாவும் அழகாச்சே
வயதை மீறிய வாழ்விலே
சிறு கவிதை உருவாச்சே

விரலினை தாண்டிடும்
நகமென இவன் பாசமே
கிரீடமா பாரமா
புரியுமா சில நேரமே

இவன் அண்ணன் பாதி
தந்தை மீதி
ஆனானே ஆனானே
தம்பி என்ற
நிலையை கடந்து
போனானே போனானே

ஆழி சூழ்ந்த உலகிலே
யாவும் அழகாச்சே
வயதை மீறிய வாழ்விலே
சிறு கவிதை உருவாச்சே



Credits
Writer(s): Raja Sudarsan Kumar, Mohan Rajan A
Lyrics powered by www.musixmatch.com

Link