Pattukutty - From "Raja Ranguski"

பட்டுகுட்டி நீதான்
என் பட்டு குட்டி நீதான்

இருவது வயதானவளே
இதயத்தை தொட்டு போனவளே
இவள் முகம் ஒரு வானவில்லே
இதற்கு மேல் சொல்ல தோணவில்லே

தினசரி உன்னை பார்த்திடவே
வரம் கொடு என் தேவதையே
எனக்கென ஒரு ஊருமில்லை
உன்னை விட்டால் ஒரு பேருமில்லை

பட்டுகுட்டி நீதான்
பார்வையால் என்ன தாக்குறடி
என் பட்டு குட்டி நீதான்
பதுங்கியே நெஞ்சில் பாயுறடி

விழிகளால் என்னை நீ அழைத்தால்
விரும்பியே வந்து பூ குடுப்பேன்
திரும்பியே கொஞ்சம் நீ சிரித்தால்
திருவிழா தானே

தொடுவதும் சிரிப்பதும் அடிக்கடி
தொடருமா தொடருமா
இமைகளால் இழுக்கிறாய் இவனை நீதான் பெண்ணே
கண்ணாடியாய் பார்த்தால் தெரிவதும் நீயே
கண்மூடியே பார்த்தால் கனவிலும் நீயே
தொலைவிலே உன் முகம் பார்த்து தூண்டிலை போடும் காதலன் நானே
எதிரிலே கடவுள் வந்தால் உன்னை மட்டும் தான் நான் காண்பேனே

பட்டுகுட்டி நீதான்
உன் நடையிலே உயிர் துடிக்குதடி
என் பட்டுகுட்டி நீதான்
உயிர் பிழைக்கவே ஒரு வழி சொல்லடி

உன்னை விட வேர் யாருமில்லை
உன்னை விட்டு போக தோணவில்லை
காதலின் சுமை பாரமில்லை
பதில் சொல்லு நாளை



Credits
Writer(s): Yuvan Shankar Raja, Kabilan
Lyrics powered by www.musixmatch.com

Link