Ezhu Ezhu

வெற்றி மகிழ்ச்சி மட்டும் தான் கொடுக்கும்
ஆனா தோல்வி தான் உங்கள செதுக்கும்

விழுந்தால் விதை
எழுந்தால் மரம்
எழு எழு எழு...
துணிந்தால் செயல்
சுழன்றால் புயல்
எழு எழு எழு...
புறப்படு இது தான்
புலியின் நடை
புஜபலம் காட்டி தடைகள் உடை
கவலைகள் என்னும் கடையை அடை
கனவுகள் ஜெய்திடும் புதிய படை
மாணவன் என்பவன் பூ பந்தா
மற்றவர் உதைத்திடும் கால் பந்தா
சோதனை தாண்டி நீ வந்தா
சொர்க்கமே இருக்கு வா நண்பா
எழு எழு எழு...
விழுந்தால் விதை
எழுந்தால் மரம்
எழு எழு எழு...
துணிந்தால் செயல் சுழன்றால் புயல்
எழு எழு எழு...

நீங்கல்லாம் யாரு...
பத்து லட்சம் பேர் ஒண்ணா கூடி நின்னு போயிருந்த ஜல்லிக்கட்ட
மறுபடியும் நடந்ததுன இனம்டா
போங்கடா போய் எல்லாரயும் முட்டி தூக்குங்கடா
உறங்கி கிடந்தால் உயர்வு இல்லை
உழைப்பால் வென்றிடு
பொன் மெடலை
இருட்டிடும் வானம் நமக்கு இல்லை
இறங்கி அடிடா தோல்வி இல்லை
தேனாய் இனிக்கட்டும் வேர்வை துளி
தீயாய் இருக்கட்டும் உழைப்பின் வழி
தானாய் திறக்குமா வெற்றி வழி
நீதானே உன்னை செதுக்கும் ஊளி
எழு எழு எழு எழு...
விழுந்தால் விதை
எழுந்தால் மரம்
எழு எழு எழு...
துணிந்தால் செயல்
சுழன்றால் புயல்
எழு எழு எழு... எழுமின்



Credits
Writer(s): Vivek, Ganesh Chandrasekaran
Lyrics powered by www.musixmatch.com

Link