En Anbe (Tum Hi Ho)

என் அன்பே எந்தன் ஆருயிரே
நீ இல்லாத வாழ்வும் வெறுமையடி

என் அன்பே எந்தன் ஆருயிரே
நீ இல்லாத வாழ்வும் வெறுமையடி
உன் கார் குழலும் அந்த மழை துளியும்
என்னை தழுவிடும் போது உந்தன் ஞாபகமே

விழி மூடினால் நீயும் வருகிறாய்
விழி திறக்கையில் ஏனோ மறைகிறாய்
பிரிவினால் நம்மை அறிகிறோம்
அறிவதால் பின்பு இணைகிறோம்

ஒரு கணநேர பிரிவையும் இங்கே
ஒரு யுகமாகவே கழிக்கின்றேன்
என் கண்களில் வழியும் நீர்த்துளியில்
ஓர் துளி துளியாய் உன்னை காண்கிறேன்

நீ இல்லை என்றால் நானும் இல்லை இங்கே
என் சுவாசமும் நீதானே

விழி மூடினால் நீயும் வருகிறாய்
விழி திறக்கையில் ஏனோ மறைகிறாய்
பிரிவினால் நம்மை அறிகிறோம்
அறிவதால் பின்பு இணைகிறோம்

என் அன்பே...
என் அன்பே...

உன் பாடலில் என்னை மறந்தேன்
அன்பே உந்தன் வழி நடந்தேன்
வீணையின் நாதம் போல் நானும் உனக்கு
சங்கதி இல்லாத சங்கீதம் எதற்கு

இனி உனது விழி அது எனது வழி
நாம் இருவரும் ஒருவர் அன்றோ ஓ...

விழி மூடினால் நீயும் வருகிறாய்
விழி திறக்கையில் ஏனோ மறைகிறாய்
பிரிவினால் நம்மை அறிகிறோம்
அறிவதால் பின்பு இணைகிறோம்

நீயன்றோ இனி நீயன்றோ
என் வாழ்கையும் இனி நீயன்றோ
நீயன்றோ இனி நீயன்றோ
என் சுவாசமும் இனி நீயன்றோ



Credits
Writer(s): Mithoon, V. Senthil
Lyrics powered by www.musixmatch.com

Link