Karbagraham Vitu

பாண்டி மலையாளம்
காசி ராமேஸ்வரம்
அடக்கி ஆளும் ஆண்டியப்பா
தளுவனான தங்கச்சி
பேச்சியம்மா பேய்காமன்
உனக்குள்ள அடக்கமப்பா
ஆடி வெள்ளி பூத்திருச்சு
உச்சி பூஜை காத்திருக்கு
ஏத்துக்கிட வெளிய வா
வெளிய வா வெளிய வா

விரு விரு மாண்டி விருமாண்டி
விரு விரு மாண்டி விருமாண்டி
விரு விரு மாண்டி விருமாண்டி
விரு விரு மாண்டி விருமாண்டி

கர்ப்ப கிரகம் விட்டு சாமி வெளியேறுது
இது நியாய தீர்ப்புக்கு ஒரு நாளுடா
தர்மம் பூட்டுப் போட்டா உள்ள அடங்காதுடா
இப்போ தடுக்குறவன் அதை யாரடா
கூலிக்கொரு மாரடிக்கும் கூட்டத்துக்கு
கூலி தரும் நேரம் இது
பாவம் செஞ்சி பாவ பட்ட கும்பலுக்கு
பலன் கெடைக்கும் நேரம் இது
கர்ப்ப கிரகம் விட்டு சாமி வெளியேறுது
இது நியாய தீர்ப்புக்கு ஒரு நாளுடா
விரு விரு மாண்டி விருமாண்டி
விரு விரு மாண்டி விருமாண்டி
தர்மம் பூட்டுப் போட்டா உள்ள அடங்காதுடா
இப்போ தடுக்குறவன் அதை யாரடா

தப்பு செஞ்சவன சாமியே புடிச்சு
தண்டிக்குமா தர்ம சாஸ்திரம்
சட்டமும் இங்கிருக்கு நியாயம் கிடைக்கல
சட்டத்தால் உண்டா பிரயோஜனம்
சத்தியம் இன்னிக்குத்தான் சத்தியமா
சரியாக சத்தம் போட்டு பேசுது
தர்ம தேவன் ஏறி வரும்
சாலத் தெரு ஓரத்துல
எங்க விருமாண்டி வெளியேறும் போது
அதை குறுக்க வந்து மரிக்குறவன் யாரு
கர்ப்ப கிரகம் விட்டு சாமி வெளியேறுது
இது நியாய தீர்ப்புக்கு ஒரு நாளுடா
தர்மம் பூட்டுப் போட்டா உள்ள அடங்காதுடா
இப்போ தடுக்குறவன் அதை யாரடா
கூலிக்கொரு மாரடிக்கும் கூட்டத்துக்கு
கூலி தரும் நேரம் இது
பாவம் செஞ்சி பாவ பட்ட கும்பலுக்கு
பலன் கெடைக்கும் நேரம் இது
கர்ப்ப கிரகம் விட்டு சாமி வெளியேறுது
இது நியாய தீர்ப்புக்கு ஒரு நாளுடா



Credits
Writer(s): Vairamuthu, Ilayaraja
Lyrics powered by www.musixmatch.com

Link