Poongodithaan

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
பாட்டெடுத்து தாமதிக்க
வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா

ஆசைக்குத் தாழ் போட்டு அடைத்தென்ன லாபம்
அதுதானே குடந்தன்னில் எரிகின்ற தீபம்
மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்
மழைநீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம்

சிலருக்குச் சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது
துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது
காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப் போல்...

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
பாட்டெடுத்து தாமதிக்க
வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா

தாய்கூட அழுகின்ற பிள்ளைக்குத்தானே
பசியென்று பரிவோடு பாலூட்ட வருவாள்
உன்வீட்டுக் கண்ணாடி ஆனாலும் கூட
முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே

மனதுக்குள் பலகோடி நினைவுகள் இருந்தாலும்
உதடுகள் திறந்தால்தான் உதவிகள் பெறக்கூடும்
கோழைக்குக் காதலென்ன ஊமைக்குப் பாடலென்ன...

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
பாட்டெடுத்து தாமதிக்க
வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா



Credits
Writer(s): S. P. Balasubrahmanyam
Lyrics powered by www.musixmatch.com

Link