Kollathey Kollathey (From Kolaigaran)

கொல்லாதே கொல்லாதே கொல்லாதே
கீறல்கள் நெஞ்சத்தில் ஆறாதே
கண்ணோரம் தீ தூரி போகாதே
முத்தத்தின் ஈரங்கள் காயாதே

கடல் நடுவே தாகம் என்றே
உடல் நடுங்கி போனது இங்கே
பெருங்கனவின் தவணைகளில்
தினம் உன்னை எண்ணி

தேன் மொழியே
நான் தனியே
தேன் மொழியே
நான் தனியே

கொல்லாதே கொல்லாதே கொல்லாதே
கீறல்கள் நெஞ்சத்தில் ஆறாதே
கண்ணோரம் தீ தூரி போகாதே
முத்தத்தின் ஈரங்கள் காயாதே

கடல் நடுவே தாகம் என்றே
உடல் நடுங்கி போனது இங்கே
பெருங்கனவின் தவணைகளில்
என்றும் என்றும் என்றும்

தனியே
தனியே

நீ இல்லா நேரத்தில் கண் மூடும் பிறையே
ஒளியும் உறைந்தே போனது இங்கே
நான் இன்றி நீ என்றும் வாழ்வதும் பிழையே
என் காதல் சருகாய் ஆனது இங்கே

ஆதூரா
நீ தானா
தூரங்கள் போர் தானா ஆஆஅ

வலைகளில் இங்கே பெருங்கடல் சிறை
உன் கண்களில் இங்கே நான் இறை
பிரிவென்பது இல்லை மறக்காவும் இல்லை
எங்கு தேடுவேன்

தேன் மொழியே
நான் தனியே
தேன் மொழியே
நான் தனியே

கொல்லாதே கொல்லாதே கொல்லாதே
கீறல்கள் நெஞ்சத்தில் ஆறாதே
கண்ணோரம் தீ தூரி போகாதே
முத்தத்தின் ஈரங்கள் காயாதே

கடல் நடுவே தாகம் என்றே
உடல் நடுங்கி போனது இங்கே
பெருங்கனவின் தவணைகளில்
தினம் உன்னை எண்ணி

தனியே...
தேன் மொழியே
நான் தனியே...



Credits
Writer(s): Simon K.king, Dhamayanthi
Lyrics powered by www.musixmatch.com

Link