Kavalai Padathey

கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதலத்தான் சேத்து வாப்பா
கவலை படாதே சகோதரா

கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதலத்தான் சேத்து வாப்பா
கவலை படாதே சகோதரா

யம்மா யம்மா யம்மா
உன் ரூபத்துல சும்மா
மயங்கவில்லயம்மா மனச
பார்த்த காதல் தானம்மா

கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதலத்தான் சேத்து வாப்பா
கவலை படாதே சகோதரா

காந்தி சில பக்கத்துல
பார்த்த காதல் வேறதான்
காசி தியேட்டர் உள்ளுக்குள்ள
பார்த்த காதல் வேறதான்

வி.ஜி.பிக்கு போன காதல்
திரும்புறப்ப முடியிது
வி.ஐ.பீக்கு காதல் வந்தா
ஹோட்டல் ரூம்மு நெறையிது

நா ஆட்டோ ஓட்டி சுத்துறப்போ
காதலிச்ச கேடிதான்
ஆணை மாத்தி காதலிச்ச
கதைய பாத்தா கேடிதான்

கண்ணால பார்த்து பார்த்து
வந்த காதல் நூறுதான்
கண்ணியமான காதல் உன் காதல் தானடா
சகோதரா சகோதரா சகோதரா ...

கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதலத்தான் சேத்து வாப்பா
கவலை படாதே சகோதரா

லிப்ட் கேட்டு வந்த காதல் சிப்ட் மாறி போனது
சேல வாங்கி கொடுத்த காதல் கால வாரி விட்டது
ஆபிசுல வந்த காதல் அஞ்சு மணிக்கு முடிஞ்சது
அடுத்த காதல் பஸ் ஸ்டாப்புல ஆறு மணிக்கு நடந்தது

நூறு ருபா நோட்ட பார்த்தா
காதல் வரும் காலந்தா
ஊரு பூரா சுத்தி வந்தேன்
பார்த்ததெல்லாம் கேளேண்டா

கண்ணால பார்த்து பார்த்து
வந்த காதல் நூறுதான்
தனித்துவமான காதல் உன் காதல் தானடா
சகோதரா சகோதரா சகோதரா...

கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதலத்தான் சேத்து வாப்பா
கவலை படாதே சகோதரா



Credits
Writer(s): Agathiyan, Deva
Lyrics powered by www.musixmatch.com

Link