Vaanamthan

வானம்தான் தீ புடிச்சி வெண்ணிலா எரிகிறதே
வீணை தான் நரம்பறுந்து வீதியில் அழுகிறதே
காதல் கவிதை எழுதிய காகிதம் கழுதை தின்பதுவோ
கடலில் கலக்கும் முன்பே நதிதான் உப்பாய் கரிப்பதுவோ
மூங்கில் காடே எரிகின்ற போது குழல் தான் இசைத்திடுமோ
தண்ணிர் எல்லாம் வெண்ணிர் ஆனால் தாமரை மலரிந்திடுமோ

வானம்தான் தீ புடிச்சி வெண்ணிலா எரிகிறதே
வீணை தான் நரம்பறுந்து வீதியில் அழுகிறதே

கூரை விட்டில் கொல்லிவைத்த போது
இந்த குருவிகள் எங்கே போகும்
அதன் சிறகுகள் தீயில் வேகும்
கோயில்கள் எல்லாம் கல்லரை ஆனால்
இந்த தெய்வம் எங்கே வாழும்
இது பாவம் செய்த பாவம்
வானவில்லை ரத்தமாகி போனதை
ரோசா பூவை மாடு மேய்ஞ்சி போனதை
துள்ளும் மீனை தூண்டில் வந்து தின்னுதே
என்ன நான் சொல்லுவேன் என்ன வென்று சொல்லுவேன்

வானம்தான் தீ புடிச்சி வெண்ணிலா எரிகிறதே
வீணை தான் நரம்பறுந்து வீதியில் அழுகிறதே
காதல் கவிதை எழுதிய காகிதம் கழுதை தின்பதுவோ
கடலில் கலக்கும் முன்பே நதிதான் உப்பாய் கரிப்பதுவோ
மூங்கில் காடே எரிகின்ற போது குழல் தான் இசைத்திடுமோ
தண்ணிர் எல்லாம் வெண்ணிர் ஆனால் தாமரை மலரிந்திடுமோ

Credits
Writer(s): Vijay Antony
Lyrics powered by www.musixmatch.com

Link