Vaanathe Paarthein (From "Manithan")

வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுஷனை இன்னும் பார்க்கலையே

வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுஷனை இன்னும் பார்க்கலையே
நான் பிறந்தது அழுதிட தானா
ஏய் விதியே சரி தானா

தங்கை என்னும் தங்கம் இங்கே
தீயில் வேகும் இப்போது
கண்கள் சிந்தும் கண்ணீராலே
எந்த தீயும் அணையாது

வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுஷனை இன்னும் பார்க்கலையே
நான் பிறந்தது அழுதிட தானா
ஏய் விதியே சரி தானா

நிலைமையை சொல்ல முடியாது
நிலவுக்கு தற்கொலை கிடையாது
பூவை வைத்த பாவியே
தீயை வைக்கிறான்

நெருப்புக்கு உண்மை தெரியாது
தெரிந்தால் நெருப்பு எரியாது
உண்மை வந்து பேசுமா
ஊமை நான் அம்மா

மணநாள் பார்த்தவன் நானே
பிண நாள் பார்ப்பதும் நானே
மணநாள் பார்த்தவன் நானே
பிண நாள் பார்ப்பதும் நானே

வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுஷனை இன்னும் பார்க்கலையே
நான் பிறந்தது அழுதிட தானா
ஏய் விதியே சரி தானா

ஏற்கனவே அவன் எரித்து விட்டான்
எரித்ததை மறுபடி எரித்து விட்டான்
தர்மம் காக்கும் தேவனோ
தூங்கி போய் விட்டான்

வாழ்க்கை எதுவென்று புரியவில்லை
வாய் விட்டு அழவும் வசதியில்லை
வெந்த புண்ணில் அல்லவோ
வேலும் பாய்ந்தது

விதியால் வந்ததா இல்லை
சதியால் வந்ததே தொல்லை
விதியால் வந்ததா இல்லை
சதியால் வந்ததே தொல்லை

வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுஷனை இன்னும் பார்க்கலையே
நான் பிறந்தது அழுதிட தானா
ஏய் விதியே சரி தானா

தங்கை என்னும் தங்கம் இங்கே
தீயில் வேகும் இப்போது
கண்கள் சிந்தும் கண்ணீராலே
எந்த தீயும் அணையாது

வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுஷனை இன்னும் பார்க்கலையே
நான் பிறந்தது அழுதிட தானா
ஏய் விதியே சரி தானா



Credits
Writer(s): Vairamuthu Ramasamy Thevar, Chandrabose
Lyrics powered by www.musixmatch.com

Link