Om Namachivaya Om - Lord Shiva - From "Ghibran's Spiritual Series"

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே

ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய

என்னிலே இருந்த உன்றை யானறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றை யானறிந்து கொண்டதின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர்காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யானுனர்ந்து கொண்டேனே

ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய

நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஏனதேது ராம ராம ராமவென்ற நாமமே

ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய

அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தில் ஓரெழுத்து அறிந்து கூற வல்லிறேள்
அஞ்சலஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே

ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய

இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூல மான்மழு
எடுத்த பாத நீள்முடி எண்திசைக்கும் அப்புறம்
உடல்கலந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரே

ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய

உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றை மேவி நின்றதல்ல
மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல போசுமாவி தானுமல்ல
அறியதாகி நின்ற நேர்மை யாவர்காண வல்லரே

ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய

மங்கலங் கவிழ்ந்தபோது வைத்து வைத்தடுக்குவார்
வெண்கலமங் கவிழ்ந்தபோது வேண்டுமென்று பேணுவார்
நம்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
என்கலந்து நின்றமாயம் என்னமாயம் ஈசனே

ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய

ஆனவஞ்செழுத்திலே அண்டமும் அகண்டமும்
ஆனவஞ்செழுத்திலே ஆதியான மூவரும்
ஆனவஞ்செழுத்திலே அகாரமும் மகாரமும்
ஆனவஞ்செழுத்திலே அடங்கலாவலுற்றதே

ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய

நினைப்பதொன்று கண்டிலேன் நீயல்லாது வேறில்லை
நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாய்கை மாய்கையை
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு எங்கனே

ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய

பண்டு நான் பறிதெந்த பட்டவர்கள் எத்தனை
பாலிலே ஜெபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
மின்டராய் திறிந்தபோது இறைத்த நீர்கள் எத்தனை
மேலவும் சிவாலயங்கள் சூழவந்ததெத்தனை

ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய

அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும் வந்து அனுகுமோ
செம்பொன்னம்பலத்துலே தெளிந்ததே சிவாயமே

ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய

'ஔ'வென்னும் எழுத்தினால் அகண்டம் ஏழுமாகினாய்
'உ'வ்வென்னும் எழுந்தினால் உருத்தறித்து நின்றனை
'ம'வென்னும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
'அ'வும் 'உ'வும் 'ம'வுமாய் அமர்ந்ததே சிவாயமே

ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய

மூன்று மண்டலத்திலும் முட்டி நின்ற தூணிலும்
நான்ற பாம்பின் வாயினும் நவின்றெழுந்த அட்சரம்
ஈன்ற தாயும் அப்பனும் எடுத்துறைத்த மந்திரம்
தோன்றும் ஓர் எழுத்துலே சொல்ல வெங்குதில்லையே

ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய

நமசிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளும்
நமசிவாய மஞ்சு தஞ்சும் புறனமான மாய்கையை
நமசிவாய அஞ்செழுத்தும் நம்முல்லே இருக்கவே
நமசிவாய உண்மையை நன்குறை செய் நாதனே

ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய

இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள்
இல்லை என்று நின்ற ஒன்றை இல்லை எண்ணலாகுமோ
இல்லையல்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லை கண்டு கொண்டோர் இனி பிறப்பதிங்கு இல்லையே

ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய

கார கார! கார கார
காவல் ஊழிக் காவலன்
போர போர! போர போர
போரில் நின்ற புண்ணியன்

மார மார! மார மார
மரங்கள் ஏழும் எய்தசீ
ராம ராம! ராம ராம
ராமவென்னும் நாமமே

ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய

வின்னில் உள்ள தேவர்கள் அறியோனாத மெய்ப்பொருள்
கண்ணில் ஆணியாகவே கலந்து நின்ற எம்பிரான்
மண்ணெல்லாம் பிறப்பறுத்த மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முள்ளே அமர்ந்து வாழ்வதுண்மையே

ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய

அகாரமான தம்பலம்! அனாதியான தம்பலம்
உகாரமான தம்பலம்! உண்மையான தம்பலம்
மகாரமான தம்பலம்! வடிவமான தம்பலம்
சிகாரமான தம்பலம்! தெளிந்ததே சிவாயமே

ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய

உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தன்மையான மந்திரம் சமைந்த ரூபமாகிய
வெண்மையான மந்திரம் விளைந்து நீரதானதே
உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே

ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய

ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்த பின்
ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம் நமசிவாயமே உட்கலந்து நிற்குமே

ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய



Credits
Writer(s): Traditional Traditional, Mohamaad Ghibran Ghanesh Balaji
Lyrics powered by www.musixmatch.com

Link