Aadadhada Aadadhada

ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா

அந்த ஆண்டவன்தான் சாவி கொடுத்து ஆட்டி வைக்கிறான்
ரொம்ப ஆடிபுட்டா வாழ்கையை தான் பூட்டி வைக்கிறான்

ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
பத்து மாசம் சுமந்து அவ பட்டினிதான் கெடப்பா
நம்ம பக்குவமா பெத்தெடுக்க பத்தியம் தான் இருப்பா
மூச்சடக்கி முக்குளிச்ச முத்த போல காப்பா
அவ முந்தானையில் தொட்டில் கட்டி முத்தம் நூறு கொடுப்பா

பெத்தபுள்ள துடிக்கும் போது...
பெத்தபுள்ள துடிக்கும் போது கண்ணீர் சிந்துவா
அது கண்ணீர் இல்லடா அவ ரத்தம் தானடா
பூமியில நடந்து வரும் தெய்வம் தாண்டா தாயி
அத புரிஞ்சிக்காம பெத்த மனச தவிக்க விட்ட பாவி

ஆடாதடா யப்பா, ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா

அந்த ஆண்டவன்தான் சாவி கொடுத்து ஆட்டி வைக்கிறான்
ரொம்ப ஆடிபுட்டா வாழ்கையை தான் பூட்டி வைக்கிறான்

ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
சினிமாவுல காதலிச்சா ரசிக்குதப்பா உள்ளம்
நெஜ வாழ்கையில காதலிச்சா பரிக்குதப்பா பள்ளம்
பொறக்குறப்போ தலையில தான் எழுதி வச்சதப்பா
ஒரு பொன்னும் ஆணும் இச்டப்பட்டா அதுவும் என்ன தப்பா?

காத்துக்கொரு வேலி இல்ல...
காத்துக்கொரு வேலி இல்ல காதலுக்கும் வேலி இல்ல
ஜாதி மத பேதம் என்ன சாத்தானுக்கு வேதம் என்ன
நெழல மிதிச்சு அழிக்க வந்த முட்டாளு
பூமி சுத்துற மட்டும் காதல் இருக்கும் நீ கேளு

தெரிஞ்சும் ஆடாதடா
யப்பா, ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா

அந்த ஆண்டவன்தான் சாவி கொடுத்து ஆட்டி வைக்கிறான்
ரொம்ப ஆடிபுட்டா வாழ்கையை தான் பூட்டி வைக்கிறான்

ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா



Credits
Writer(s): Deva, Vaali, Balu P R C
Lyrics powered by www.musixmatch.com

Link