Vantheyalla

வந்தியளா வந்தியளா
கூத்து பாக்க வந்தியளா
நீங்க குத்த வைக்க வந்தியளா

ஐயா வந்தியளா வந்தியளா
நாடகம் பாக்க வந்தியளா
நீங்க நட்டமா நிக்க வந்தியளா

அண்ணன் மாரே தம்பி மாரே
அருமையுள்ள அக்கா மாரே
அண்ணன் மாரே தம்பி மாரே
அருமையுள்ள அக்கா மாரே
பெத்தெடுத்த தாயி மாரே
பேரு பெற்ற பெரியோரே

வணக்கமுங்க வணக்கம்
ஐயா வந்தனமுங்க வந்தனம்
இங்கே வந்த சனமெல்லாம் குந்தனும்

நாங்க வரும் போது வாங்கியாந்தோம்
வாசமுள்ள சந்தனம்
சந்தனத்தை பூசுங்க
நீங்க சந்தோஷமா பாருங்க
மன்னாதி மன்னவராம்
மறவர் குல மாணிக்கமா
முக்குலத்து சிங்கமுங்க
முத்துராமலிங்கமுங்க
முக்குலத்து சிங்கமுங்க
முத்துராமலிங்கமுங்க
பொறந்து வளந்த பூமி
அதை போற்றி பாடுறோம் சாமி
பொறந்து வளந்த பூமி
அதை போற்றி பாடுறோம் சாமி
அண்ணன் மாரே தம்பி மாரே
அருமையுள்ள அக்கா மாரே

ஏ புள்ளே சிட்டு
என்ன மச்சான்

இந்த ஊரு ஐயாக்க மாரு
அருமை பெருமை எல்லாத்தையும்
பாடி முடுச்சுட்டோம்
இனி நம்ம கூத்தை
எடுத்து விட்டுறுவோமா

விட்டுறுவோம்

உருண்ட மலை
தெறண்ட மலை
ஒய்யார கழுகு மலை
பாசி படந்த மலையே
தங்கமே தில்லாலே
நான் படுத்துறங்கும்
பஞ்சு மலையே
தங்கமே தில்லாலே
பாசி படந்த மலையே
தங்கமே தில்லாலே
நான் படுத்துறங்கும்
பஞ்சு மலையே
தங்கமே தில்லாலே

ஒண்ணு ரெண்டு
கல் பொறுக்கி மாமா
ஓடையில பாலங்கட்டி
பாலத்துல நடக்கயில மச்சான்
பாத்து பாத்து கண்ணடிச்சான்

பாத்தா மொறக்கிறியே
இழுத்து மறைக்கிறியே
சுண்டி இழுக்கிறியே
சூட்ட கெளப்புறியே

ஊரிருக்குது ஒரவிருக்குது
பாத்திருக்குது பக்கமிருக்குது
வேர்த்திருக்குது வெக்கம் தடுக்குது

ஏன்டி இப்படி பசப்புற
ஏன் ஆசையத்தான் உசுப்புற
சுருக்கு பையா இடுப்புல
என்ன சொருகி வச்சு மயக்குற
ஓடக்காடு ஒடம்பக்காடு புள்ளே
ஒளிஞ்சிருக்க கொய்யாக்காடு
கொய்யாக்காட்டுக்கு உள்ள வந்தா
நாம கூட்டாஞ்சோறு ஆக்கிடலாம்

ஏன் கைய புடிப்பே
காதை புடிப்பே
ஏன் இடுப்ப கிள்ளுவே
கூட இருக்க சொல்லுவே

உன் சீலை தந்தனே
நான் ரவிக்க தந்தனே
ஏ சோப்பு தந்தனே
நானும் சீப்பு தந்தனே
என்ன ஏச்சுப்புட்டாளே
ஆள ஓச்சுப்புட்டாளே
ஐயோ தாங்க முடியல
நான் தூங்க முடியல
ஏ வாட வெத்தல வதங்க வெத்தல
வாய்க்கு நல்லால்லே
ஆ வளஞ்ச கோர கொழஞ்ச கோர
பாய்க்கு நல்லால்லே
ஏ நேத்து பூத்த ரோச பூவு
கொண்டைக்கு நல்லால்லே
அந்த குருவி கொத்துன கொய்யாபழம்
தொண்டைக்கு நல்லால்லே

ஏ வாட வெத்தல
ஆ வதங்க வெத்தல
ஏ வாட வெத்தல வதங்க வெத்தல
வாய்க்கு நல்லால்லே
ஆ வளஞ்ச கோர கொளஞ்ச கோர
பாய்க்கு நல்லால்லே

அடி சீனா சீனா ஏன் சிலுக்கு
சிக்குன்னுதான் அது இருக்கு

அட வேணாம் ஒனக்கு இந்த கிறுக்கு
நீ வேராள பாரு அதுக்கு

சிம்பொனியா போனியா
சினிமாவுக்கு வாரியா
அடி குண்டு பொண்ணு மீனம்மா
குச்சி ஐசு வேணுமா

இம்பாலா பாலோ பண்ணுவேசீனே
நீயாக்க சீனு சென்னவா

ஹேய் ரொம்பத்தான் பீத்திக்கிறியே
போடி வெடிக்காத பொட்டு வெடியே
ஐயோ சீனா சீனா ஏன் சிலுக்கு
சிக்குன்னுதான் அது இருக்கு

ஏய் ஒனக்குன்னுதான் இது இருக்கு
ஓன் இஷ்டத்துக்கு அடி நொறுக்கு



Credits
Writer(s): Deva, Vairamuthu Ramasamy Thevar, Seeman
Lyrics powered by www.musixmatch.com

Link