Usurey

உசுரே... ஏ... தானே...
தான்னானே தான்னானே...
தான்னானே தான்னானே...

நாலு நிமிஷம் உன்ன காணாம
நீ காணாம... ஆ...
என் நாடி நரம்பு சுருங்கி போனேனே
நான் போனேனே...

கண் இருந்தும் கபோதி ஆனேனே
நான் ஆனேனே...
உன்னை பார்த்த போது ஊமையா போனேனே
நான் போனேனே...

சிலையா நின்னேனே...
தவமா நின்னேனே
நின்னேனே... நின்னேனே...

நாலு நிமிஷம்
அடி நாலு நிமிஷம் உன்ன காணாம
உன்ன காணாம... ஆ...
என் நாடி நரம்பு சுருங்கி போனேனே
நான் போனேனே...

இடுப்புல வெச்ச பானை
உன் மடிப்புல நிக்குதடி
அந்த மடிப்புல வைக்குற போதே
என் மனசே சிக்குதடி

அந்த பானைக்கு கெடச்ச மோட்ச்சம்
இந்த பாவிக்கு கெடைக்கலடி
குல சாமிக்கு கூட கண்ணு
கொஞ்சம் கோளாரா போச்சுதடி

பாழடைஞ்ச வீடா கெடக்கு என் மனசு
நீ ஓடி வந்து ஒட்டற அடிச்சு உசுர காப்பாத்து
பாழடைஞ்ச வீடா கெடக்கு என் மனசு
நீ ஓடி வந்து ஒட்டற அடிச்சு உசுர காப்பாத்து

மின்மினி பூச்சிய போல
நீ மின்னிட்டு போறியடி
அந்த கானாங்குருவிய போல
கண்ணில் காணாம போனியடி

வேப்பமரத்து நிழலா
நீ வேர் ஊண்ட வேணுமடி
உன் நிழலின் அருமை தெரிஞ்சே
நான் தலை சாய்க்க வேணுமடி

பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு
நீ ஓடி வந்து நீரா நின்னு உசுருக்கு உசுரூட்டு
பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு
நீ ஓடி வந்து நீரா நின்னு உசுருக்கு உசுரூட்டு

உசுரே... ஏ... தானே...
தான்னானே தான்னானே...
தான்னானே தான்னானே...



Credits
Writer(s): Govindarajan Venkate Prakashkumar, Maya Mahalingam
Lyrics powered by www.musixmatch.com

Link