Arakkiye

நீரும் தீயும் சீறிப் பாயும் போரைக் கண்டாயா?
நீயும் நீயும் என்னைப் போலே போதை கொண்டாயா?
வெட்டுக் கத்தி முத்தத்தாலே என்னைத் தொட்டாயா?
துன்பம்கூட இன்பம் என்று கற்றுக் கெட்டாயா?
ஹே, காமப் பகைவி ஆடைத் துறவி என்னை உடைத்தாய் கட்டித் தழுவ
மோகம் பரவி மோட்சம் பெறுதே எந்தன் பிறவி

மோதிப்பார்க்காதே... என் வெப்பம் பட்டு தீர்ந்தே போகாதே அரக்கியே
மோதிப்பார்க்காதே... என் வேகம் கண்டு சோர்ந்தே சாகாதே சிறுவனே

உன் தோளில் என் பாதம் என் மார்பில்
உன் கன்னம் யார் மேலே யாரென்று கேட்பேன்?
தேனில் நா வீழ்ந்தாலும் நாவில் தேன்
வீழ்ந்தாலும் இன்பங்கள் மாறாது என்பேன்
ஆங்காங்கே கீறல்கள் செவ்வானத் தூறல்கள்
உன் தேகம் தாங்காது கண்ணா

வால்மீன்கள் வீழாத
வானில்லை காயங்கள் இல்லாத போர்வீரன் நானில்லை
ஹே காமப் பகைவி ஆடைத் துறவி
என்னை உடைத்தாய் கட்டித் தழுவி
மோகம் பரவி மோட்சம் பெறுதே எந்தன் பிறவி

மோதிப்பார்க்காதே... என் வெப்பம் பட்டு தீர்ந்தே போகாதே அரக்கியே
மோதிப்பார்க்காதே... என் வேகம் கண்டு சோர்ந்தே சாகாதே சிறுவனே
மோதிப்பார்க்காதே நீ காயம் கொண்டால் நெஞ்சம் தாங்காதே என்னுயிரே



Credits
Writer(s): Madhan Karky Vairamuthu, Anivee
Lyrics powered by www.musixmatch.com

Link