Vidhiyae

விதியே உன் கை எழுதும் கவிதை வேதனை மொழி தானா

கண்மணி ராமன் காட்டினில் நடக்க விடுவதும் முறைதானா

ஜனகன் திருமகள், தசரதன் மருமகள், வனத்தில் வந்தது உன்னால் தானா

நடப்பது நடக்கும் நாடகம் தொடர தேவனின் வாழ்விலே மானிடத் துயரம்
மூவரும் நடந்த பாதையில் முள்ளும் சிந்தியதே கண்ணீர்

கண்மணி ராமன் காட்டினில் நடக்க விடுவதும் முறைதானா
விதியே உன் கை எழுதும் கவிதை வேதனை மொழி தானா

கல்லிலும் மண்ணிலும் காவலர் செல்வங்கள் மெல்ல நடந்து செல்லும் கோலம் பாரீர்
அண்ணன் ராமனின் தாகம் அறிந்து தண்ணீர் தந்திடும் தம்பியின் பாசம்
ப்ரபுவின் பாதம் சிந்தும் ரத்தம் விஷ்ணுவின் பாத கங்கை நீரோ
அரண்மனை விருந்தாய் ஆரண்யக் கதைகளை அமுதாய் அருந்தினனே

கண்மணி ராமன் காட்டினில் நடக்க விடுவதும் முறைதானா
விதியே உன் கை எழுதும் கவிதை வேதனை மொழி தானா
கண்மணி ராமன் காட்டினில் நடக்க விடுவதும் முறைதானா
கண்மணி ராமன் காட்டினில் நடக்க விடுவதும் முறைதானா

Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link