Rama Bhanam

ராம பாணம், மழைப் போலே பொழிய
வேள்வியை அழிக்கும் அரக்கர்கள் அழிய

தன் பணி முடித்து தசரத ராமன்
வனத்தில் நடந்தனன், முனிவரைக் காத்திட
தரணியில் இறைவன், பூமிக்கு லாபம்
அணி அணியாக, அரக்கர்கள் வந்தார்
அணி அணியாக அரக்கர்களே வந்து வீழ்ந்தனர் பிணமாய்
அவதாரம் இது, அரக்கரை அழித்து தர்மத்தைக் காத்திடவே

பரதனின் ராமராஜ்ஜிய சேவை
அகல் விளக்கேற்றினாள், ஊர்மிளைப் பாவை

அன்னைக் கோசலை, அரண்மனைச் சிலையோ
அவளின் நெஞ்சம், ஆழ்கடல் அலையோ

ராமனைப் பார்க்க, ஏக்கமும் ஏனோ?
வழியும் கண்ணீர், தொடர்கதை தானோ?
வாசலைப் பார்த்தால், மகன் வருவானோ?

நாட்கள் சென்றன
நரைமுடி கண்டன
கோசலைக் காத்திருந்தாள்
வழிமேல் விழியை வைத்திருந்தாளே, பாவம் ராமனின் தாய்

அங்கே தாயின் கண்ணீர் வெள்ளம்
இங்கே நதியில் தண்ணீர் வேகம்
கர்மவீரனின் நிலையைப் பாரீர், நமக்கும் கண்ணில் வருமே கண்ணீர்



Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link