Yaarukku Un Balam

யாருக்கு உன் பலம், யாருக்கு உன் பலம்
யாருக்கு உன் பலம் யாருக்கும் இல்லை
(யாருக்கு உன் பலம் யாருக்கும் இல்லை)
ஆழ்கடல் தாண்டியே அக்கரைப் போய்வர
ஆற்றலும் ஊக்கமும் யாருக்கும் இல்லை
(ஆற்றலும் ஊக்கமும் யாருக்கும் இல்லை)

லோகங்கள் மூன்றிலும் யாருமில்லை
லோகங்கள் மூன்றிலும் யாருமில்லை
எந்த லோகத்திலும் உன் போல் வீரனும் இல்லை
(லோகத்திலும் உன் போல் வீரனும் இல்லை)
இவ்வேளையில் லங்கைக்கு செல்ல ஆளில்லை

சூரியனைத் தின்ற சூரனே உன்னைப் போல்
பூமியில் எங்குமே யாருமேயில்லை
(பூமியில் எங்குமே யாருமேயில்லை)
ராமனின் சேவைக்கு காலத்தின் தேவைக்கு
வானத்தில் போய்வரும் வல்லவன் இல்லை
(வானத்தில் போய்வரும் வல்லவன் இல்லை)

தேவர்கள் வானத்தில் தோன்றினரே
மாருதி உன்னிடம் வேண்டினரே
இன்று சூரியன் வந்திட வாய் திறந்தாய்

காரியம் கைகூட, தேவியைத் தேடிட
ராமனின் சேவைக்கு உன்னைப் போல் இல்லை
காரியம் கைகூட, தேவியைத் தேடிட
ராமனின் சேவைக்கு உன்னைப் போல் இல்லை

உன் பலம் யாருக்கும் இல்லை இங்கே
உன்னைப் போல் வீரனும் இல்லை இங்கே
இனி உன்னை நீ எண்ணியே பாராய்

இந்த நேரத்திலே, உந்தன் வீரத்தையே
அதை ரூபத்திலே சொன்னோம் கேளாய்
அனுமானே மாவீரனே கேளாய்
உந்தன் வீரத்தை நீ எண்ணிப் பாராய்

இந்த நேரத்திலே, உந்தன் வீரத்தையே
அதை ரூபத்திலே சொன்னோம் கேளாய்
இந்த நேரத்திலே, உந்தன் வீரத்தையே
அதை ரூபத்திலே சொன்னோம் கேளாய்

ராமனின் நாமத்தை பாடும் இடங்களில்
மாருதி நீ வந்து கை தட்டுவாயே
(மாருதி நீ வந்து கை தட்டுவாயே)
ராமரசம் என்ற ஜீவரசம் உன்னை
வீரரசம் கொள்ளச் செய்தது அன்றோ
(வீரரசம் கொள்ளச் செய்தது அன்றோ)

ராமனின் சேவைக்கு நீ பிறந்தாயே
ராமனின் சேவைக்கு நீ பிறந்தாயே
உன்னுடன் சேவைக்கு நாங்கள் வந்தோமே
நீ சிலையாய் இன்று ஊமைப் போலே நின்று
வேடிக்கைப் பார்த்தாலே போவது எங்கே

லங்கை சென்று செய்தியுடன் வா
அன்னையைக் கண்டு ஆசியுடன் வா
ஸ்ரீ ராமன் கேட்பாரே நம்மை
அன்னை உள்ள இடம்
அந்த லங்கைவனம் என்று சொன்ன பின்னும் மௌனம் ஏனோ

அனுமானே மாவீரனே கேளாய்
உந்தன் வீரத்தை எண்ணியே பாராய்
இந்த நேரத்திலே, உந்தன் வீரத்தையே
அதை ரூபத்திலே சொன்னோம் கேளாய்
இந்த நேரத்திலே, உந்தன் வீரத்தையே
அதை ரூபத்திலே சொன்னோம் கேளாய்



Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link