Urangaadha Vizhigalil

உறங்காத விழிகளில் உறங்காத நினைவுகள்
உள்ளம் என்ற கடலிலே, ஓயாத அலைகள்

உறங்காத விழிகளில் உறங்காத நினைவுகள்

எனது செல்வ மைந்தனும், இன்று இல்லை இங்கே
தம்பி கும்பகர்ணா, நீ போனதெங்கே?
என்னைச் சுற்றியே இன்று சொந்தபந்தம் இல்லையே
அந்த மரண தேவனுக்கு பசியும் தீரவில்லையே

இலங்கேஷ்வரன் என்று சொல்ல எனக்கு தகுதி இல்லையே
இலங்கையின் எதிர்காலம் கண்ணில் தெரியவில்லையே
மலை போல நின்ற நான், நிலைகுலைந்தென்ன?

உறங்காத விழிகளில் உறங்காத நினைவுகள்
உறங்காத விழிகளில் உறங்காத நினைவுகள்

இறைவன் இங்கு மானிட வடிவம் கொண்டதாலே
இதயம் என்ற கடலிலே, வேதனை அலைபோலே
தர்மம் என்ற போர்க்களத்தில் அதர்மம் ஓங்கலாமா?
அதர்மம் ஓங்கும் போது, நான் ஒதுங்கலாமா?

அனுபவங்கள் தந்த பாடம் கண்களை திறக்காதா?
அகந்தை என்னும் பேய்குணத்தின் பிடிகளும் தளராதா?
அமைதி என்ற சூழ்நிலை, இங்கே மலர்ந்திடாதா?

உறங்காத விழிகளில் உறங்காத நினைவுகள்
உறங்காத விழிகளில் உறங்காத நினைவுகள்

கனல் போன்ற சீதை, கண்ணீர் சிந்தலாமா?
மண்டோதரி ராணி, மனம் உருகலாமா?
ஒரு பெண்ணின் வேதனை ஒரு பெண்ணுக்கு தான் தெரியும்
சீதைக்கு மண்டோதரி என்ன செய்ய முடியும்?

மன்னவன் மனதிலே மாற்றம் ஏன் வரவில்லை?
மாதரசி சீதைக்கு ஏன் விடிவு இல்லை?
என் வேந்தன் செய்த பாவம், இலங்கை அழியலாமா?

உறங்காத விழிகளில் உறங்காத நினைவுகள்
உறங்காத விழிகளில் உறங்காத நினைவுகள்

அரண்மனைச் செல்வி தரையிலே கிடப்பதா?
சீதை என்ற தேவி, சிந்தனையில் ஆழ்வதா?
என்ன முடிவு ஆகும்?
இனி என்று தீரும் சோகம்?
எனது ஷ்ரி ராமன் நினைவு தான் என் ஜீவன்

கணங்களே யுகங்களாக நகருகின்ற நேரம்
கண்களிலே ராம ரூபம் வந்து வந்து போகும்
தனிமை என்ற கொடுமை இன்று எத்தனை நாள் நீளும்?

உறங்காத விழிகளில் உறங்காத நினைவுகள்
உறங்காத விழிகளில் உறங்காத நினைவுகள்
உள்ளம் என்ற கடலிலே ஓயாத அலைகள்

உறங்காத விழிகளில் உறங்காத நினைவுகள்
உறங்காத விழிகளில் உறங்காத நினைவுகள்



Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link