Mannadhi Mannan

மன்னாதி மன்னன்
மகத்தான வீரன்
பெண்ணாசையாலே பிணமாகினான்

உற்றார்கள் சொன்னார்
உயிர் மனைவி சொன்னாள்
தம்பியும் சொன்னான்
தடம் மாறினான்

மன்னா நீ அன்று மன்றத்தில் வைத்து காலால் உதைத்தாயே உன் தம்பியை
அவன் தானே இன்று அனல் தூக்கி வந்தான்
அண்ணா நீ என்ற உயிர் பாசத்தால்
அண்ணா நீ என்ற உயிர் பாசத்தால்

வேதத்தில் மேதை
வீரத்தில் சூரன்
பாவத்தைச் செய்தாய்
பலியாகினாய்

நவக்கிரகம் எல்லாம் உனைக் கண்டு நடுங்கும்
சிவபக்தன் நீயே லங்கேஷனே
தவறாகச் சென்றாய்
தர்மத்தைக் கொன்றாய்

தாய் போன்ற சீதையை கலங்க வைத்தாய்
தாய் போன்ற சீதையை கலங்க வைத்தாய்
தலை சாய்ந்து தரையில் வீழ்ந்து விட்டாய்

பிடி சாம்பல் ஆகும்
உடல் தீயில் வேகும்
பெண்சாபம் தீயினும் சூடாகும்
வரலாறு உன்னை இழிவாகப் பேசும்

வரும் காலம் உன்னை மதியாது போகும்
வரும் காலம் உன்னை மதியாது போகும்
வாழ்ந்தென்ன கண்டாய் லங்கேஷனே



Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link