Thaalaattu Paadum (From "Kaadan") - Single

தாலாட்டு பாடும் தென்றல்
எச பாட்டு பாடும் குயில்கள்
கை தாளம் போடும் கிளிகள்
அதை கேட்டு ஆடும் மயில்கள்
கை தட்டி காடெல்லாம்
தோளோடு தோள் சேருவோம்

ஆடுவோம் ஆடுவோம்
பள்ளுதான் பாடுவோம்
ஆடுவோம் ஆடுவோம்
பள்ளுதான் பாடுவோம்

தாலாட்டு பாடும் தென்றல்
எச பாட்டு பாடும் குயில்கள்
கை தட்டி காடெல்லாம்
தோளோடு தோள் சேருவோம்

ஆடுவோம் ஆடுவோம்
பள்ளுதான் பாடுவோம்
ஆடுவோம் ஆடுவோம்
பள்ளுதான் பாடுவோம்

புள்ளி மானின் கூட்டங்களே
இந்த காட்டின் பிள்ளைகளே
துள்ளி தாவி ஓடுங்களேன்
பயம் இல்லை வாழுங்களேன்

காட்டு பூ வாசம் வாசம்
வாழ்த்து சொல்லி பேசும் பேசும்
ஊத காத்து வீசும் வீசும்
உன்னை கொஞ்சி பேசும் பேசும்
நீ போகும் பாதையிலே
ஒரு வானவில் தீட்டுவோம்

ஆடுவோம் ஆடுவோம்
பள்ளுதான் பாடுவோம்
ஆடுவோம் ஆடுவோம்
பள்ளுதான் பாடுவோம்

நடைபோடும் மழைமேகம்
இடியோடு விளையாடும்
அதுபோடும் ஒலிக்கோலம்
உன் விழியில் நாம் கண்டோம்

உன் தோளில் புயல் சாயும்
கை கோர்க்கும் சுழல்காற்றும்
உன் குரலின் ஓசை கேட்டால்
காடே தலையாட்டும்

மண்ணால் செஞ்ச ஒரு பொம்மை நான்
காட்டு தாயின் சிறுபிள்ளை நான்
உயிர் காக்கும் உன் தோழன் நான்
இமையாக இருப்போமே நாம்

தாலாட்டு பாடும் தென்றல்
எச பாட்டு பாடும் குயில்கள்
கை தாளம் போடும் கிளிகள்
அதை கேட்டு ஆடும் மயில்கள்
கை தட்டி காடெல்லாம்
தோளோடு தோள் சேருவோம்

ஆடுவோம் ஆடுவோம்
பள்ளுதான் பாடுவோம்
ஆடுவோம் ஆடுவோம்
பள்ளுதான் பாடுவோம்

விளையாடும் விண்மீன்களே
நிலவோடு வாருங்களே
காடன் காணும் கனவை எல்லாம்
கலைக்காமல் பாருங்களேன்
காடன் காணும் கனவை எல்லாம்
கலைக்காமல் பாருங்களேன்



Credits
Writer(s): Shantanu Moitra, A G Mani
Lyrics powered by www.musixmatch.com

Link