Never Let Me Go

கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடி
மௌனங்கள் மாயமாய் போகாதோ

என்றும் உன் ஞாபகம்
கண் முன்னே தோன்றுதே
உன் உள்ளம் என் காதலால் மாறாதோ

கைக்கோர்த்து நாம்
நடந்த பாதைகள்
நீ இல்லை என்று குறை கூறுதே
மழைத்துளிகள் மண்ணை சேர்கையில்
உனது வாசம் என்னுள் நினைவூட்டுதே

ஆற்றிலே மிதக்கும் ஓடமாய்
பாதையை தேடினேன் உன் பாதத்தில்

கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடா
மௌனங்கள் மாயமாய் போகாதோ

இலை நீரில் மூழ்குமா
நிலா காதல் கூறுமா
துளி கூட துணையின்றி வாடுமா

கடிகார முட்கள் போல
உயிர் உன்னை சுற்றி வருதே
நிகழ் காலம் நிழல் இன்றி வாடுதே

சொல்லாமலே மனங்களும் சேர்ந்ததன்று
விடை சொல்லியே முறிந்தது காதல் இன்று

காற்றிலே களையும் மேகமாய்
போகிறேன் தூரமாய் ஓஹோ...

கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடா
மௌனங்கள் மாயமாய் போகாதோ

என்றும் உன் ஞாபகம்
கண் முன்னே தோன்றுதே
உன் உள்ளம் என் காதலால் மாறாதோ

கைக்கோர்த்து நாம் நடந்த பாதைகள்
நீ இல்லை என்று குறை கூறுதே
மழைத்துளிகள் மண்ணை சேர்கையில்
உனது வாசம் என்னுள் நினைவூட்டுதே

ஆற்றிலே மிதக்கும் ஓடமாய்
பாதையை தேடினேன் உன் பாதத்தில்

கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடா
மௌனங்கள் மாயமாய் போகாதோ



Credits
Writer(s): Shankar Raja Yuvan, Oviya Oommapathy
Lyrics powered by www.musixmatch.com

Link