Payanam (From "FIR")

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

ஏன் இந்த கிரக்கம்
தாழாத மயக்கம்
சில் என்ற இரவும் அதில்
தொடங்கும் இந்த பயணம்

பேசாத மொழியும்
தேயாத நிலவும்
என்னோடு அவளும் இது
தொடரும் இந்த பயணம்

முதல் முறை
உயிர் வரை
சிலிர்த்து பாக்கிறேன்
அவள் தரும் உணர்வு தன
என்னை கேட்கிறேன்

சிக்கிக்கொண்டாடும் உயிரும்
திக்கிதிண்டாடும் மனமும்
கத்தி கூத்தாட தவிக்கும்
அந்த நொடியில் இந்த பயணம்

ரத்தரரா ரத்தரரா ரத்தரராரா ரா ரா ரா

என் விடியல் அது புதிய தோற்றமோ
உன் அருகில் இது என்ன மாற்றமோ

இரவின் மடியில் மறுகும் மனதில்
சலிக்கும் கனவை சலன நினைவை
இருக்கும் நிலவும் கருக்குள பொழுதில்
நெருங்கி வரவா விலகி விடவா

சிக்கி...
சிக்கிக்கொண்டாடும் உயிரும்
திக்கிதிண்டாடும் மனமும்
கத்தி கூத்தாட தவிக்கும்
அந்த நொடியில் இந்த பயணம்

சில் என்ற இரவும் அதில்
தொடங்கும் இந்த பயணம்

அஹ்ஹா அஹ்ஹா அஹ்ஹா
அஹ்ஹா அஹ்ஹா அஹ்ஹா
ரத்தரரா ரத்தரரா ரத்தரராரா ரா ரா ரா

உன் இதயம் அது ன்னை சேருமோ
நம் உறவு அது ஒன்று போதுமோ

மழையின் துளியில் உனது
ஸ்பரிசம்
சிதறும் நினைவில் இனிய குழப்பம்
பரவி படரும் புதிய சுகந்தம்
உனது என்றதும் முகர தயக்கம்

சிக்கிக்கொண்டாடும் உயிரும்
திக்கிதிண்டாடும் மனமும்
கத்தி கூத்தாட தவிக்கும்
அந்த நொடியில் இந்த பயணம்

ஏன் இந்த கிரக்கம்
தாழாத மயக்கம்
சில் என்ற இரவும் அதில்
தொடங்கும் இந்த பயணம்

பேசாத மொழியும்(பேசாத மொழியும்)
தேயாத நிலவும் (தேயாத நிலவும்)
என்னோடு அவளும் இது (என்னோடு அவளும் இது)
தொடரும் இந்த பயணம்



Credits
Writer(s): Ashwath, Bagavathy Pk
Lyrics powered by www.musixmatch.com

Link