Maniyae Manikuyilae

மணியே மணிக்குயிலே
மாலை இளம் கதிரழகே
கொடியே கொடிமலரே
கொடி இடையின்
நடையழகே

தொட்ட இடம்
பூமணக்கும் துளிர்க்கரமோ
தொட இனிக்கும்

பூமரப் பாவை
நீயடி இங்கு நான் பாடும்
பாமரப் பாடல் கேளடி

ஓஹோ ஹோ
ஓஓஓ மணியே மணிக்குயிலே
மாலை இளம் கதிரழகே

கொடியே கொடிமலரே
கொடி இடையின்
நடையழகே

பொன்னில்
வடித்த சிலையே
பிரம்மன் படைத்தான்
உனையே வண்ணமயில்
போல வந்த பாவையே

எண்ண
இனிக்கும் நிலையே
இன்பம் கொடுக்கும்
கலையே உன்னை
எண்ணி வாழும் எந்தன்
ஆவியே

கண்ணிமையில்
தூண்டிலிட்டு காதல்தனை
தூண்டிவிட்டு எண்ணி
எண்ணி ஏங்கவைக்கும்
ஏந்திழையே

பெண்ணிவளை
ஆதரித்து பேசித்தொட்டுக்
காதலித்து இன்பம்கண்ட
காரணத்தால் தூங்கலையே

சொல்லிச் சொல்லி
ஆசை வைத்தேன் கொடி
இடையில் பாசம் வைத்தேன்
பூமரப் பாவை நீயடி இங்கு
நான் பாடும் பாமரப் பாடல்
கேளடி

ஓஹோ ஹோ
ஓஓஓ மணியே மணிக்குயிலே
மாலை இளம் கதிரழகே

கொடியே கொடிமலரே
கொடி இடையின் நடையழகே

தொட்ட இடம்
பூமணக்கும் துளிர்க்கரமோ
தொட இனிக்கும்

பூமரப் பாவை
நீயடி இங்கு நான் பாடும்
பாமரப் பாடல் கேளடி

ஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆஆ

கண்ணிமைகளை
வருத்தி கனவுகளைத் துரத்தி
மென்மனதினால் முடித்த
மூக்குத்தி

என்னுயிரிலே
ஒருத்தி கண்டபடி
என்னை துரத்தி
அம்மனவள் வாங்கி
கொண்ட மூக்குத்தி

கோடிமணி
ஓசைநெஞ்சில் கூடி
வந்துதான் ஒலிக்க
ஓடிவந்து கேட்கவரும்
தேவதைகள்

சூடமலர் மாலை
கொண்டு தூபமிட்டு
தூண்டிவிட்டு கூடவிட்டு
வாழ்த்தவரும் வானவர்கள்

அந்தி வரும்
நேரமம்மா ஆசை
விளக்கேற்றுதம்மா

பூமரப் பாவை
நீயடி இங்கு நான் பாடும்
பாமரப் பாடல் கேளடி

ஓஹோ ஹோ
ஓஓஓ மணியே மணிக்குயிலே
மாலை இளம் கதிரழகே (2)

தொட்ட இடம்
பூமணக்கும் துளிர்க்கரமோ
தொட இனிக்கும்

பூமரப் பாவை
நீயடி இங்கு நான் பாடும்
பாமரப் பாடல் கேளடி

ஓஹோ ஹோ
ஓஓஓ நானன நான நான
நா ஓஹோ ஹோ ஓஓஓ
நானன நான நான நா (2)



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link