Amma Amma

அம்மம்மா
இதயம் எரியும் கொடுமை நடந்ததே
பூ மாலை
கனலில் விழுந்து கருகிப் போனதே
தீயோடு தீயாகித் தீந்தாயே

அம்மம்மா
எரியும் சிதையிலே நிலவும் கருகவே
தனிமைச் சிறையிலே மனதும் உருகவே
அன்பு நெஞ்சமே
இங்கு அனலில் வேகுதே

துன்பம் ஒன்றுதான்
என் சொந்தம் ஆனதே
கனவுகள்தான் கலைந்திடவே
புது மலர்தான் பொசுங்கியதே

எரியும் சிதையிலே நிலவும் கருகவே
தனிமைச் சிறையிலே மனதும் உருகவே
அன்பு நெஞ்சமே
இங்கு அனலில் வேகுதே
துன்பம் ஒன்றுதான்
என் சொந்தம் ஆனதே

சோறூட்டிப் பார்த்திருந்து
சொந்தம் என ஆதரித்த
தாயவளும் தீ கொண்டாள்
என்ன சதியோ

தாலாட்ட தாயும் இன்றி
சொல்லி அழ யாரும் இன்றி
ஏங்கி அழுதே இங்கே
ஏழைக் கிளியே

ஒளியே மறைந்தே கிடக்க
உலகே இருளில் தவிக்க
அடிமை உயிர் தான் மலிவா
விடிவே எமக்கு இல்லையா

விழியில் தெரியும் விடிவே
அது தினமும் எழுதும் முடிவே
இங்கு வெடித்திடும் நெருப்பினில்
கொடுமைகள் எரிந்திடுமே

எரியும் சிதையிலே நிலவும் கருகவே
தனிமைச் சிறையிலே மனதும் உருகவே
அன்பு நெஞ்சமே
இங்கு அனலில் வேகுதே
துன்பம் ஒன்றுதான்
என் சொந்தம் ஆனதே

ஆண்டாண்டு காலம் இங்கு
அடிமை என வாழ்ந்ததெல்லாம்
நாளை முதலே இங்கே மாறி விடலாம்

வாதாடிப் பார்த்ததெல்லாம்
வீணாகப் போனதென்ன
வாளை எடுத்தால் இங்கே நீதி பெறலாம்

துணிவே துணையாய் இனி வா
புலியாய் எழுவாய் மனிதா
தடையே தகரும் இனியே
தருமம் ஜெயிக்கும் நிஜமே

கொடுமைச் சிறையும் உடைக்க
ஒரு சபதம் எடுத்து வருவேன்
இனி விடிந்திடும் பொழுதுகள் நமக்கென விடியட்டுமே ஏ

எரியும் சிதையிலே நிலவும் கருகவே
தனிமைச் சிறையிலே மனதும் உருகவே
அன்பு நெஞ்சமே
இங்கு அனலில் வேகுதே

துன்பம் ஒன்றுதான்
என் சொந்தம் ஆனதே
கனவுகள்தான் கலைந்திடவே
புது மலர்தான் பொசுங்கியதே



Credits
Writer(s): Vaali, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link