Valaattum

வாலாட்டும் ஊர்க் குருவி
சின்னத் தாலாட்டு கேட்கிறது
வாலாட்டும் ஊர்க் குருவி
சின்னத் தாலாட்டு கேட்கிறது

சிந்து ஒன்று வந்து சிந்துகிறதிங்கே
சிந்துமணிச் சிந்து கொஞ்சுகிறதிங்கே
அது சிந்தாத ஓர் மணியே
இந்த சிந்தாமணி மணியே
வாலாட்டும் ஊர்க் குருவி

பூத்து குலுங்கும் நந்தவனம்
இது காத்து கிடக்கும் பூங்காவனம்
பூத்து குலுங்கும் நந்தவனம்
இது காத்து கிடக்கும் பூங்காவனம்
பக்கத்தில் வந்து பறிக்கத்தான் சொல்லி
காத்துல சேதி சொல்லும்

காத்தடிச்சு வாசம் வந்து
என் மனசை தான் கெடுக்க
பூப் பறிச்சு பூப் பறிச்சு
மாலை ஒண்ணு நான் தொடுக்க
காத்துத்தான் இங்கே நிக்கிறேன் அன்பே
சிந்தாத ஓர் மணியே
இந்த சிந்தாமணி மணியே

வாலாட்டும் ஊர்க் குருவி
சின்னத் தாலாட்டு கேட்கிறது
தாலாட்டு கேட்கையிலே
கொஞ்சம் வாலாட்ட பார்க்கிறது

சிந்து ஒன்று வந்து சிந்துகிறதிங்கே
சிந்துமணிச் சிந்து கொஞ்சுகிறதிங்கே
அது சிந்தாத ஓர் மணியே
இந்த சிந்தாமணி மணியே
வாலாட்டும் ஊர்க் குருவி

நேத்து இருந்தேன் ஆத்தோரமா
வழி பாத்து கிடந்தேன் காத்தாட நான்
நேத்து இருந்தேன் ஆத்தோரமா
வழி பாத்து கிடந்தேன் காத்தாட நான்
பூத்தது என் கண்ணு பூவு அது இல்லை
நம்பு இதை பெண்ணே பெண்ணே

படுத்து நானும் மேலப் பாத்தா
கூரை மேல நீ இருக்க
உடுத்த துணி பாத்தெடுத்தா
சேலை மேல நீ இருக்க
கெட்டுத்தான் போனேன்
மனசுல தானே
சிந்தாத ஓர் மணியே
இந்த சிந்தாமணி மணியே

வாலாட்டும் ஊர்க் குருவி
சின்னத் தாலாட்டு கேட்கிறது
தாலாட்டு கேட்கையிலே
கொஞ்சம் வாலாட்ட பார்க்கிறது

சிந்து ஒன்று வந்து சிந்துகிறதிங்கே
சிந்துமணிச் சிந்து கொஞ்சுகிறதிங்கே
அது சிந்தாத ஓர் மணியே
இந்த சிந்தாமணி மணியே
வாலாட்டும் ஊர்க் குருவி



Credits
Writer(s): Ilaiyaraaja, Kavignar Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link