Thooliyile Ada Vantha - Male Version

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆனிமுத்தே

தொட்டில் மேலே முத்து மாலை
வண்ண பூவா விளையாட
சின்ன தம்பி எசைபாட

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆனிமுத்தே

பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
பட்டமரம் பூ மலரும் பாறையிலும் நீர் சுரக்கும்
பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
பட்டமரம் பூ மலரும் பாறையிலும் நீர் சுரக்கும்
ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்
ஏழுகட்டை எட்டு கட்டை தெரிஞ்சா நான் படிச்சேன்
நான் படச்ச ஞானமெல்லாம் யார் கொடுத்தா சாமிதான்
ஏடெடுத்து படிச்சதில்லை சாட்சி இந்த பூமிதான்

தொட்டில் மேலே முத்து மாலை
வண்ண பூவா விளையாட
சின்ன தம்பி எசைபாட

சோறு போட தாயிருக்கா, பட்டினிய பாத்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்கு போனதில்ல
சோறு போட தாயிருக்கா, பட்டினிய பாத்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்கு போனதில்ல
தாய் அடிச்சு வலிச்சதில்ல இருந்தும் நான் அழுவேன்
நான் அழுக தாங்கிடுமா உடனே தாய் அழுவா
ஆகமொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ளை தான்
வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்ல தான்

தொட்டில் மேலே முத்து மாலை
வண்ண பூவா விளையாட
சின்ன தம்பி எசைபாட

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆனிமுத்தே

தொட்டில் மேலே முத்து மாலை
வண்ண பூவா விளையாட
சின்ன தம்பி எசைபாட
வண்ண பூவா விளையாட
சின்ன தம்பி எசைபாட



Credits
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link