Deivam Neethaaney

தெய்வம் நீ தானே
தாயும் நீ தானே
அண்ணனே உனைத் தள்ளியே
மனம் போகாதே

தெய்வம் நீ தானே
தாயும் நீ தானே
அண்ணனே உனதன்புமே
கரை காணாதே

உறவே ஆடும் ஊஞ்சல் கயிறோ?
வானம் வரையில் நீளுமே
உயிரே போடும் கோலம்
இதிலே வாழ்வின் வசந்தம் கூடுமே

ஒளிரும் உன் கண்ணிலே
பெருகும் ஆனந்தமே
உலகம் ஓய்ந்தாலுமே
தொடரும் நம் சொந்தமே

தாலீலா-தாலிலா
தாலீலா-தாலிலா
தாலீலா-தாலிலா
தாலீ-தாலீ-லா
ஓ-ஓ-ஓ

தாலீலா-தாலிலா
தாலீலா-தாலிலா
தாலீலா-தாலிலா
தாலீ-தாலீ-லா

தெய்வம் நீ தானே
தாயும் நீ தானே
அண்ணனே உனைத் தள்ளியே
மனம் போகாதே

வெயிலோ மழையோ வருமுன்
குடையாகிடும் உறவு இதே
தவமே புரியா வரம் தான்
அண்ணன் என்று ஆனதே

குறையே சொல்லாத உன் அன்பாலே
துளியும் கண்ணீரைப் பார்த்ததில்லை
விலையே இல்லாத உன் முன்னாலே
விறகும் ஆகாதோ பூங்கிளை

அருகில் இருந்தாலும்
அழுது வழிந்தாலும்
நினைவுனை நாளும் பேசுமே
நரைகள் விழுந்தாலும்
நரம்பு தளர்ந்தாலும்
விலக விரும்பாது பாசமே

தாலீலா-தாலிலா
தாலீலா-தாலிலா
தாலீலா-தாலிலா
தாலீ-தாலீ-லா
ஓ-ஓ-ஓ

தாலீலா-தாலிலா
தாலீலா-தாலிலா
தாலீலா-தாலிலா
தாலீ-தாலீ-லா

தெய்வம் நீ தானே
தாயும் நீ தானே
அண்ணனே உனைத் தள்ளியே
மனம் போகாதே

தெய்வம் நீ தானே
தாயும் நீ தானே
அண்ணனே உனதன்புமே கரை காணாதே

உறவே ஆடும் ஊஞ்சல் கயிறோ?
வானம் வரையில் நீளுமே
உயிரே போடும் கோலம்
இதிலே வாழ்வின் வசந்தம் கூடுமே

ஒளிரும் உன் கண்ணிலே
பெருகும் ஆனந்தமே
உலகம் ஓய்ந்தாலுமே
தொடரும் நம் சொந்தமே

தாலீலா-தாலிலா
தாலீலா-தாலிலா
தாலீலா-தாலிலா
தாலீ-தாலீ-லா
ஓ-ஓ-ஓ

தாலீலா-தாலிலா
தாலீலா-தாலிலா
தாலீலா-தாலிலா
தாலீ-தாலீ-லா

தெய்வம் நீ தானே
தாயும் நீ தானே



Credits
Writer(s): Imman David, Premkumar Paramasivam
Lyrics powered by www.musixmatch.com

Link