Polladha Ulagathiley

இந்த பொல்லாத உலகத்திலே
ஏன் என்னை படைத்தாய் இறைவா
வலி தாங்காமல் கதறும் கதறல்
உனக்கே கேட்க வில்லையா

எட்டு திக்கோடும் போய் இருப்பவன் நீ
எங்கு போய் தொலைந்தாய் இறைவா
கரும் கல்லான உன்னை நான்
பொழுதும் தொழுதேன் போதவில்லையா

வாடி வதங்கும் ஏழையை
நீயும் வதைத்தால் ஆகுமா
கோடி விளக்கை ஏற்றி நீ
ஊதியணைத்தால் நியாயமா

கண்ணீரே வழித்துணையா
நின்றேனே இது விதியா
எல்லாமே தெரிந்தவன் நீ
காப்பாற்ற மனம் இல்லையா

வேதனை மேலும் வேதனை
தருவதும் உன் வேலை ஆனதோ
உறவின்றி என் உயிர் நோவதோ

கேட்டு நான் வாங்க வில்லையே
கொடுத்த நீ வாங்கி போவதோ
துணை இன்றி நான் தனியாவதோ

காணாத கனவை நீ காட்ட
வாழ்வு வந்ததே
கை சேர்ந்த நிலவை பாராமல்
வானம் தோர்ந்ததே

வரம் தராமல் நீ போனால் என்ன
சோராமல் போர் இடுவேன்
என்ன ஆனாலுமே ஓயாமலே
என் பாதை நான் தொடர்வேன்

கண்ணீரே வழித்துணையா
நின்றேனே இது விதியா
எல்லாமே தெரிந்தவன் நீ
காப்பாற்ற மனம் இல்லையா

தேடியே கால்கள் ஓய்ந்ததே
திசைகளும் வீழ்ந்து போனதே
இரு கண்ணிலும் புகை சூழ்ந்ததே

வேர்வரை தீயும் பாய்ந்ததே
வெறுமையில் நாட்கள் நீளுதே
அதிகாரமோ விளையாடுதே

ஊர் ஓரம் ஆனதை மேல் ஏற
ஏணி இல்லையே
வீழ்ந்தாலும் விடாமல் தோள்தாங்க
நாதி இல்லையே

ஒரு நூலே இல்லா காத்தாடி போல்
தள்ளாடுதே இதயம்
இனி என்னாகுமோ ஏத்தகுமோ
பதில் சொல்லாமல் போகாது காதல்

இந்த பொல்லாத உலகத்திலே
ஏன் என்னை படைத்தாய் இறைவா
வலி தாங்காமல் கதறும் கதறல்
உனக்கே கேட்க வில்லையா

எட்டு திக்கோடும் போய் இருப்பவன் நீ
எங்கு போய் தொலைந்தாய் இறைவா
கரும் கல்லான உன்னை நான்
பொழுதும் தொழுதேன் போதவில்லையா

வாடி வதங்கும் ஏழையை
நீயும் வதைத்தால் ஆகுமா
கோடி விளக்கை ஏற்றி நீ
ஊதியணைத்தால் நியாயமா



Credits
Writer(s): Premkumar Paramasivam, Raghavendra Raja Rao
Lyrics powered by www.musixmatch.com

Link