Manidhan Tamizhan - Intro

தமிழ் தமிழ் என்று பேசுவது ஒரு fashion
தமிழை வைத்து வியாபாரம் செய்கிறார்கள்
நான் தான் தமிழை பற்றி பேச வேண்டும்
நீ பேசக்கூடாது என்றெல்லாம் பலவாரக பலபேறால்
சொந்தம் கொண்டாடப்படும் தமிழ்
உலகத்தில் ஒரு காலத்தில் ஒவ்வொரு மனிதனாலும்
பேசப்பட்ட புது மொழி

ஆம் தமிழ் ஒரு பொது உடமை
உலகத்தில் முதன் முதலில் தோன்றிய மொழி தமிழ்
உலகில் சில மதங்கள் மொழிகள் கலாச்சாரங்கள்
நாகரீகங்கள் தோன்றியே 2000 வருடங்கள் ஆகின்ற நிலையில்
சுமார் 20000 வருடங்கள் முன்பே தோன்றிய மொழி
நம் தமிழ் மொழி

ஹராபா, மொகஞ்சதாரோ, சுமீரிய நாகரீகங்களுக்கு
பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தோன்றியது தமிழ்
என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்
ஆம் சுமேரிய நாகரீகத்தின்
முதல் ஊரின் பெயரே ஊர்
Its just not a coincidence

உலகின் முதல் மனிதன் தமிழனாகத்தான்
இருந்திருக்க கூடும் என சொல்லும் DNA ஆய்வுகள்
49 நாடுகளை கொண்ட குமரி காண்டம் என்ற
மாபெரும் தமிழ் சாம்ராஜியம்
கடலுக்கடியில் மூழ்கியதால் அதன் உண்மை
உலகிற்கு தெரியாமல் போன சோகம்

2 லட்ச்சத்திற்கும் மேட்பட்ட ஓலைச்சுவடிகளில்
வெறும் பாதி கூட மொழி பெயர்க்க படாத நிலையில்
திருக்குறள், அகநானூறு, புறநானூறு போன்ற
ஒப்பற்ற நூல்கள் கிடைத்திருக்கிறது
அப்பொழுது அனைத்தும் மொழி பெயர்க்க பட்டால்?

The ancient Thamizh manuscripts were burnt and damaged

கம்போடியாவில் உள்ள உலகில் மிகப்பெரிய
கோவிலான அங்கோர்வாட்டை கட்டியது
சூர்யவர்மன் என்கின்ற வல்லவ அரசன்
என்பது நம்மில் எத்துனை பேருக்கு தெரியும்

உலகத்தில் மிகப்பெரிய கீசா pyramid'ai விட
8 மடங்கு பெரியதான தஞ்சை பெரிய கோவில்
ராஜராஜ சோழனால் ஆறே வருடங்களில்
கட்டி முடிக்கப்பட்டது எப்படி
என வியக்கும் ஆய்வாளர்கள் மத்தியில்

இதை போன்று ஒரு மாபெரும் அதிசயம்
இன்னும் உலக அதிசயமாக
ஏன் அறிவிக்க படவில்லை என்கின்ற கேள்வி

RajaRaja Chozhan is one of the most powerful King in the world history
When the whole world know about Alexander The Great
It should also know RajaRaja Chozhan

உலகிற்கு நாகரீகம், கலாச்சாரம், கலை அறிவியல், மருத்துவம்
என்று அனைத்தயும் கற்றுக் கொடுத்த நம் தமிழர்களின்
இன்றைய நிலைதான் என்ன?

தமிழின் பெருமை மறையவும் அழியவும் காரணமாக
தமிழர்களே இருப்பது மிகவும் வருத்ததிற்குரிய விசயம்
இதற்கு தீர்வுதான் என்ன?

சுலபம் ஒவ்வொருவரும் தமிழில் பேச ஆரமிப்போம்
தமிழ் மேல் வெறி செந்தமிழில் தான் பேசவேண்டும்
வேறு மொழிகளில் பேசக்கூடாது என்றெல்லாம் கூட இல்லை
தெரிந்த தமிழில் தலை நிமிர்ந்து வெட்கப்படாமல் பேசினால் போதும்

தமிழின் பெருமையயை பரப்ப நீ யார்
என்று யாரேனும் கேட்டால்?
தமிழன் என்று சொல்லாதீர்கள்
மனிதன் என்று சொல்லுங்கள்
உலகில் முதன் முதலில்
மனிதர்கள் பேசியது தமிழில் தான்
நான் மட்டும் சொல்லவில்லை
Alex Collier போன்ற ஆராய்ச்சியாளர்கள் கூட சொல்கிறார்கள்

உடை நாகரீகம் கலாச்சாரம் மதம் சாதி
என அனைத்திற்கும் அப்பாற்ப்பட்டது நம் தமிழ்
தமிழ் நாட்டில் பிறந்தவன் மட்டும் தமிழன் அல்ல
ஆபிரிக்கனோ அமெரிக்கனோ கறுப்போ சிவப்போ
தமிழ் மேல் பாசம் நேசம் மதிப்பு கொண்டு
தமிழ் பேசும் ஒவ்வொருவனும் தமிழன் தான்

தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!
தமிழன்டா!

நாங்க என்ன சொல்ல வரோம்னா வந்து
தமிழ் எங்கள் தாய் மொழி
அதுனால தமிழப்பத்தி பெருமையாக கூறுகிறோம்
மற்ற மொழிகள் கேவலம் என்றோ, ஆங்கிலத்தில் பேசக்கூடாது
அப்படிலாம் நாங்க சொல்லவே இல்ல
ஆங்கிலம் கண்டிப்பா அவசியம்

இன்னைக்கு பலபேர்க்கு வந்து ஆங்கிலந்தான் சோறு போடுது
அது உண்மை தாங்க

Language is just for communication
Whatever our mother tongue is
Telugu, Malayalam, Kannadam, Hindi
We should be proud to represent ourselves
அதுதான் நாங்க சொல்றோம்

எங்க generation பசங்களுக்கெல்லாம் வந்து
கோர்வையா தமிழ் பேசுறதே கஷ்டம்
நடுவுல நடுவுல English வந்துரும்
நாங்க என்னான அது வந்து தப்புனு சொல்லல

நாளுபேருக்கு முன்னாடி English'la பேசுனா கெத்து
தமிழ் தெரியாத மாதிரி நடிக்குறது
இந்த மாதிரிலாம் நடக்குதுங்க
இதெல்லாம் உண்மதான், நடக்குது
ஒருத்தருக்கு புரியலங்கறப்ப English'lae பேசுனாலும்
தமிழ்ல பேச நாம கேவலப்படக்கூடாதுங்கறதான் நாங்க சொல்றோம்

தமிழில் பேச பெருமைப்படுவோம்!
தமிழில் பேச பெருமைப்படுவோம்!
தமிழில் பேச பெருமைப்படுவோம்!

தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!
தமிழன்டா!



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link