Radhai Manathil

ராதை மனதில் ராதை மனதில்
என்ன ரகசியமோ?
கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டுபிடிக்க

ராதை மனதில் ராதை மனதில்
என்ன ரகசியமோ?
கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டுபிடிக்க

கொள்ளை நிலவடிக்கும்
வெள்ளை ராத்திரியில்
கோதை ராதை நடந்தாள்

மூங்கில் காட்டில்
ஒரு கானம் கசிந்தவுடன்
மூச்சு வாங்கி உறைந்தாள்

பாடல் வந்த வழி
ஆடை பறந்ததையும்
பாவை மறந்து தொலைந்தாள்

நெஞ்சை மூடிக்கொள்ள
ஆடை தேவையென்று
நிலவின் ஒளியை இழுத்தாள்

நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டாள்
நிழலைக் கண்டு நடுங்கிவிட்டாள்
கண்ணன் தேடி வந்த மகள்
தன்னைத் தொலைத்து மயங்கிவிட்டாள்

தான் இருக்கின்ற இடத்தினில்
இருதயம் காணவில்லை
எங்கே எங்கே சொல் சொல்

கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டுபிடிக்க

ராதை மனதில் ராதை மனதில்
என்ன ரகசியமோ?
கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டுபிடிக்க

கண்ணன் ஊதும் குழல்
காற்றைத் தூண்டிவிட்டு
காந்தம் போல இழுக்கும்

மங்கை வந்தவுடன்
மறைந்து கொள்ளுவது
மாயக் கண்ணன் வழக்கம்

காடு இருண்டு விட
கண்கள் சிவந்து விட
காதல் ராதை அலைந்தாள்

அவனைத் தேடி அவள்
தன்னைத் தொலைத்து விட்டு
ஆசை நோயில் விழுந்தாள்

உதடு துடிக்கும் பேச்சு இல்லை
உயிரும் இருக்கு மூச்சு இல்லை
வந்த பாதை நினைவு இல்லை
போகும் பாதை புரியவில்லை

உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால்
பேதை ராதை ஜீவன் கொள்வாள்
கண்ணா இங்கே வா வா

கண்ணீரில் உயிர் துடிக்க
கண்ணா வா உயிர் கொடுக்க

ராதை மனதில் ராதை மனதில்
என்ன ரகசியமோ?
கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டுபிடிக்க

கன்னம் தீண்டியதும்
கண்ணன் என்று அந்தக்
கன்னி கண்கள் விழித்தாள்
கன்னம் தீண்டியது கண்ணன் அல்ல
வெறும் காற்று என்று திகைத்தாள்

கண்கள் மூடிக்கொண்டு
கண்ணன் பேரைச் சொல்லி
கைகள் நீட்டி அழைத்தாள்
காற்றில் தொலைத்து விட்ட
கண்ணின் நீர்த் துளியை
எங்கு கண்டுபிடிப்பாள்

கிளியின் சிறகை வாங்கிக் கொண்டு
கிழக்கு நோக்கி சிறகடித்தாள்
குயிலின் குரலை வாங்கிக் கொண்டு
கூவிக் கூவி அவள் அழைத்தாள்

அவள் குறை உயிர் கரையும் முன்
உடல் மண்ணில் சரியும் முன்
கண்ணா, கண்ணா, நீ வா

கண்ணீரில் உயிர் துடிக்க
கண்ணா வா உயிர் கொடுக்க



Credits
Writer(s): Kadhal Madhi, Vidyasagar
Lyrics powered by www.musixmatch.com

Link