Idhuthaanaa

இதுதானா? இதுதானா?
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா?
இவன் தானா? இவன் தானா?
மலர் சூட்டும் மாணவாளன் இவன் தானா?

பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானேன்
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்

இதழ் பிரிக்காமல், குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்

இதுதானா? இதுதானா?
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா?
இவன் தானா? இவன் தானா?
மலர் சூட்டும் மனவாளன் இவன் தானா?

இனிமேல் வீட்டில் தினமும் நடக்கும்
நாடகம் இனித்திடுமே
ஒளிந்திடும் எனயே உனது விழிகள்
தேடியே அலைந்திடுமே

மாடியின் வலைவினில் என்னை கண்டு பிடிப்பாய்
பார்க்காதவன் போல் சிறப்பாய் நடிப்பாய்
திடுமென திரும்பி என் இடை வளைப்பாய்
படிகளின் அடியினில் என்னை அள்ளி அனைப்பாய்

அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே
வெக்கங்களும் வெக்கப்பட்டு ஒளிந்திடுமே

இதுதானா? இதுதானா?
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா?
இவன் தானா? இவன் தானா?
மலர் சூட்டும் மனவாளன் இவன் தானா?

ஞாயிறு மதியம் சமையல் உனது
விரும்பி நீ சமைத்திடுவாய்
வேடிக்கை பார் என என்னை அமர்த்தி
துணிகளும் துவைத்திடுவாய்

ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க
வீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சிணுங்க
பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க
இருவரின் உலகமும் இருவரில் சுருங்க

மகிழ்ச்சியில் என்தன் மனம் மலர்த்திட்டுமே
என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திடுமே

அஹ ஹாஹா அஹ ஹா ஹா
ஹஹஹ ஹா ஹஹஹ ஹா
மலர் சூட்டும் மனவாளன் இவன் தானா?

பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானேன்
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானன்
இதழ் பிரிக்காமல், குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்



Credits
Writer(s): Thamarai, Harris Jayaraj
Lyrics powered by www.musixmatch.com

Link