Adi...Adi (From "Writer")

அடியே பொம்பளப்புள்ள
அடேய் ஆம்பளப்புள்ள

நம்ம வந்த காலுக்கும் அப்பரம்
பவள வாங்கி குடுத்து (குடுத்து)
அய்யா postman அய்யா
வாழ்ந்து சலிச்சிட்டு
மையான லோகம் வழியா
அந்த மெய்யான லோகம் போராரு
அவர ஆட்டம் ஆடி
பாட்டு பாடி வழி அனுப்பி வைப்போமா (வைக்கலாமே)

அடி அடி ஒடம்பு எட்டடி
ஆடி பாடி பொழுதும் கொட்டு அடி
நாடியது அடங்கும் வரையில் நாடகம் போடுங்க நல்லபடி

உயிரது பொறந்ததெப்படி
கடைசியில் முடிவதெப்படி
காரணத்தை அறிஞ்ச மனுஷன் காவடி தூக்குவதில்லையடி

தொட்டதும் விட்டதும் எத்தன பொண்ணுங்க
கணக்கு வைக்கலையே
கொட்டையும் பட்டையும் நெத்தியில் இட்டுமே
உசுரு தங்களையே
பஞ்சமும் வஞ்சமும் எங்கள கொள்ளுது
படிக்க போகலையே
பரம்பரை உழைப்புலபசியும் தீரலையே

அடி அடி ஒடம்பு எட்டடி
ஆடி பாடி பொழுதும் கொட்டு அடி
நாடியது அடங்கும் வரையில் நாடகம் போடுங்க நல்லபடி

உயிரது பொறந்ததெப்படி
கடைசியில் முடிவதெப்படி
காரணத்தை அறிஞ்ச மனுஷன் காவடி தூக்குவதில்லையடி

நாட்டு சரக்கும் சீம சரக்கும் போட்ட பிறகு ஒண்ணு
காட்டு சிறுக்கி குந்தாணிக்கு எம்மேலேதான் கண்ணு

ஓட்ட வீடு ஒம்பது வாசல் நீயும் நானும் வெத்து
மாமன் மடியில் சாஞ்சி படுக்க வேணாம் வேற சொத்து

நாளு கிழம நல்லா இருக்கு
நாட்டு நிலம சொன்னா வழக்கு
ஊரு சனமும் ஒண்ணா இருக்கு
சப்பறதுல ஏத்துடா

கண்ணடி பாதி கல்லடி பாதி
பட்டது நாங்க,நித்தமும் ஏங்க
சட்டுனு வாங்க சங்கடம் தீக்க
மறுபொறப்பா நீங்க

அடி அடி ஒடம்பு எட்டடி
ஆடி பாடி பொழுதும் கொட்டு அடி
நாடியது அடங்கும் வரையில் நாடகம் போடுங்க நல்லபடி

உயிரது பொறந்ததெப்படி
கடைசியில் முடிவதெப்படி
காரணத்தை அறிஞ்ச மனுஷன் காவடி தூக்குவதில்லையடி

புண்ணியவனுக்கு புகழு சேரட்டும்
ஒதுங்கி நில்லுங்கடா
புள்ளையும் குட்டியும் காலமும் வாழ்ந்திட
காவந்து பண்ணுங்கடா

போனது போகட்டும் சந்ததி வாழட்டும்
மூட்டைய கட்டுங்கடா
தலமொற தலையெடுக்க பாதைய மாத்துங்கடா



Credits
Writer(s): Govind Vasantha, Yugabharathi
Lyrics powered by www.musixmatch.com

Link