Kaalam

காலம் ஒரு துரோகி
படுபாவி
பிசினாறி
நேரம் ஒரு நோய்
பிரபஞ்சம் சூழும் போய்

சுதந்திர வெளியிலே
நொடிகள் கூடிப்போடும் சதியிலே
நேரம் நதியாய் நுரைத் தள்ளித் துள்ளி ஓடுமே
ஆனால் கைதியாய் சிறையிலே
ஓடு ஓடு என்று உந்தியும்

சிலைப் போல்
மழைப் போல்
துடிக்கும் மீனை அடக்கும்
வலைப் போல் அசராத

காலம் ஒரு துரோகி
படுபாவி
பிசினாறி
நேரம் ஒரு நோய்
பிரபஞ்சம் சூழும் போய்

தனிமையில் மனத்திரையிலே
வந்து ஆடிய எண்ணங்கள்
மனதின் கூவல் செவியிலே
எட்டிப்பாடிய தருணங்கள்

என் குரல் மறந்து
தொண்டை மறத்து
வெளியே நோக்கிய கோவம் உள்பாய
என்னை மீறி எந்தன் எண்ணம்

உணர்வு கலத்தை ஆராய
சின்னஞ்சிறு ஆசையெல்லாம்
சிறையிலே சுட்டுப் புதைத்தேன்
எண்ணிய கம்பி எடுத்து
நானே என்னைத் தண்டித்தேன்

என்னைப் போல மிருகம் ஒன்றைக்
கண்டதில்லை அதுவரை நான்
மிருகத்துக்கு தீனியாக
தனிமையில் நான் மட்டும் தான்
அகம் மன அரக்கனை
ஆதரித்து ஆளவிட்ட பின்

இதயத்தின் இறைவனை
ஈவிறக்கம் ஈயவேண்டியே
யுகங்கள் தாண்டும் நொடிகள்
சொடுக்கி, நொறுக்கி, விடுவிக்கப்பட்டும்

நினைவில் நிழலாய் நிற்கும்
உலகம் நிஜத்தில் அழிக்கப்பட்டும்
துண்டித்த பாசக்கயிர் நூல்கொடியாய்
காற்றில் ஆடும் தசையில்
என் மன விசையும் இழுக்க

காலம் ஒரு துரோகி
படுபாவி
பிசினாறி
நேரம் ஒரு நோய்
பிரபஞ்சம் சூழும் போய்

இல்லம் தேடும் உள்ளம் எதிரி
புது கோரைப்பல் கர்ஜிக்கும் உலகம் எதிரி
பயன் இழந்த அடிமை மனம்
அதுக்கு ஆறுதல் சொல்ல அன்பும் இல்லை

பலம் இழந்த அதிகாரத்துவம்
அதுக்கு சாட்டை வீசத் தெம்பும் இல்லை
கேட்க மன்னிப்பு பாக்கி இருக்கு
குடுக்க நன்றி கோடி இருக்கு

இது இரண்டுக்கும் நேரம் இருக்கு
அவை நோக்கி
புழுதியில் தேயும் செருப்பு
என் செருக்கு

காலம் ஒரு துரோகி
படுபாவி
பிசினாறி
நேரம் ஒரு நோய்
பிரபஞ்சம் சூழும் போய்



Credits
Writer(s): Darbuka Siva, Kaber Vasuki
Lyrics powered by www.musixmatch.com

Link