Gangamma (From "Jetty")

கங்கம்மா கடலம்மா மாயம்மா
எங்க பொழப்புக்கு ஆதாரமா
சுழல் காத்துக்கும் சிக்காம காப்பத்தும்
தாயம்மா...

கட்டுமரத்துல கடல் மடியில
எட்டுத் திசையிலும்-ஐ-ல-சா
போட்ட துடுப்புல வீட்டு அடுப்புல
ஒலை கொதிக்குது-ஐ-ல-சா
பொங்கும் அலையில போட்ட வலையில
தங்க மீனு வரும் ஐ-ல-சா
சிந்தும் வேர்வையும் கடலில் கலக்குது
உப்பு நீரு ரொம்ப ரொம்ப கரிக்கிறதே

ஓ-ஓ-ஓ-ஓ-ஓ
ஓ-ஐ-லே-சா (ம்-ம்-ம்-ம்-ம்)
ஓ-ஐ-லே-சா-ஹா (ம்-ம்-ம்-ம்-ம்)

கங்கம்மா கடலம்மா மாயம்மா
எங்க பொழப்புக்கு ஆதாரமா
சுழல் காத்துக்கும் சிக்காம காப்பத்தும்
தாயம்மா...

படகோட்டி பலவாட்டி விலை மீன்கள் அள்ள
பயங்காட்டி சிலநேரம் விஷ மீன்கள் கொல்ல
இது நீரோட்டம் விளையாடும் சதுரங்க ஆட்டம்
தினம் போராடி ஜெயித்தாலே கரை மீண்டும் காட்டும்

கங்கம்மா கடலம்மா மாயம்மா
எங்க பொழப்புக்கு ஆதாரமா
சுழல் காத்துக்கும் சிக்காம காப்பத்தும்
தாயம்மா...

ஐய்-யா-ஐய்-யா-ஐய்-யா-ஐ-ல-சா
ஐய்-யா-ஐய்-யா-ஐய்-யா-ஐ-ல-சா

வஞ்சரம் ஒரு கூடை
வெஞ்சுரா இரு கூடை
சங்கரா பல கூடை கிடைச்சாச்சு
கெளுத்திங்க ஏராளம்
கெண்டைங்க தாராளம்
மத்தி மீனு பூராவும் அள்ளியாச்சு
இந்த செம்படவன் கூட்டத்துக்கு அம்மா யார்?
அட நம் படகில் மீனக் கொட்டும் கடல் தாயார்
உப்புத் தண்ணி சொந்தக்காரி
தப்புக் கண்டா கோபக்காரி
கடலு அம்மா போல ஒரு சாமியுண்டோ

ஐ-லே-சா (ம்-ம்-ம்-ம்-ம்-ம்)
ஐ-லே-சா (ம்-ம்-ம்-ம்-ம்)
ஐ-லே-சா (ம்-ம்-ம்-ம்-ம்-ம்)
ஐ-லே-சா (ம்-ம்-ம்-ம்-ம்)

செல்லட்டா அன்பே எனப் பேசினாரே
மச்சானக் காணாத ஆறாதம்மா
நீருக்குள் ஆடும் தீபங்கள் போல
தள்ளாடிப் போகுதே வாழ்க்கை அது
சங்கோ அது வேண்டா
முத்துக்களும் வேண்டா
சின்னப் பூ சிரிப்புக்கே ஈடுண்டா?
தங்கம் அது வேண்டா
வைரம் அது வேண்டா
பொஞ்சாதி பார்வை பொக்கிஷந்தான்

கங்கம்மா கடலம்மா மாயம்மா
எங்க பொழப்புக்கு ஆதாரமா (ஐ-ல-சா-ஐ-ல-சா)
சுழல் காத்துக்கும் சிக்காம காப்பத்தும் (ஐ-ல-சா-ஐ-ல-சா)
தாயம்மா (ஐ-ல-சா-ஐ-ல-சா-ஐ-ல-சா)

ஐ-ல-சா-ஐ-ல-சா-ஐ-ல-சா
ஐ-ல-சா-ஐ-ல-சா-ஐ-ல-சா



Credits
Writer(s): Chandrabose, Karthik Kodakandla, Kiruthiya
Lyrics powered by www.musixmatch.com

Link