Bambara Boomi (From "Kadaisi Vivasayi)

பம்பர பூமி பந்துக்குள்ள
பான செஞ்சது முத்த புள்ள
பட்டர போட்டேன் கொல்லம்புல
பேரன் பேத்தி ஊருக்குள்ள

குத்தி குத்தி நெல்லாக்கி
பத்த விட்டு சோறாக்கி
சக்கரத்த சீராக்கி
சுத்துர நாடாக்கி

வெட்டி வெட்டி கூறாக்கி
கல்ல முல்ல காடாக்கி
பங்கு போட்டு பேராக்கி
தங்குற வீடாக்கி

ஏ வெயிலு பட்ட கையில
இப்போ காப்பு காச்ச பூமி
ஏ பயிரு வச்ச பையில
லட்சம் உசுரு இருக்கு காமி
ஒரு சல்லட வச்சி சலிச்சு பாக்கும்
சந்ததிக்கும் ஓடி
பல நல்லத விட்டு போனவெங்களாம்
மன்னுக்குள்ள கோடி

பம்பர பூமி
பம்பர பூமி

தனநே-தாநே தன்ன-தானே

பாட்டன் நம்ம முப்பாட்டனும்
சேர்த்த ஒரு சொத்து சொகம்
காத்து, மழ, தண்ணீர், நிலம்
அத்தனையும் தானே
ஆத்த மடக்கட்டி
வரும் ஊத்த, கர வெட்டி
உறம் போட்ட, பய மொத்தம்
நம்ம உற-மொற தானே

நேத்திருந்தா இன்னைக்கு இல்ல
இன்னைக்கு விட்ட ஒன்னும் இல்ல
மண்ணுள்ள தங்கும்
நுண்ணுயிர்-எல்லாம்
கண்ணுக்கு படாதே
காலுக்கு கீழே வாழும் ஜீவன்
யாரு படச்சது
அது சாகும் போது நமக்கு சேந்து
சோழி முடுஞ்சது

குச்சிய தேச்ச பல்லுக்குள்ள
குளிர் காய்ச்சல் சேரவில்லை
ஆ-ஆ-ஆ
இ-இ-இ

உச்சியே காஞ்ச வானத்துல
நிழல பாத்தோம் நேரம் சொல்ல
பண்ட முறை கை மாத்தி
பெண்டு புல்ல ஆலாக்கி
வந்த கல தாலாட்டி
சொன்வ மூதாட்டி

மண்ண தினம் பாழாக்கி
குண்டு குழி roada'கி
வண்டி உட்ட பேராண்டி
கண்டதோ காவாசி

ஏ கோவனம் கட்டி
கொல்லைய சுத்தி
வந்த பாட்ட மறந்தான்
பல மாடிய கட்டி ஆடுற தொட்டி
செடிய கண்டு வியந்தான்
அட எருவ கொட்டி பரருவத்துக்கும்
பயிர காத்த சனம் தான்
இப்போ மருந்த கொட்டி
வருந்திட்டே பசிய போக்க திருஞ்சான்

பம்பர பூமி
பம்பர பூமி
சுச்-சுர சுச்-சுசு சு-சு



Credits
Writer(s): Arivarasu T. Kalainesan, M. Manikandan, Santhosh Narayanan
Lyrics powered by www.musixmatch.com

Link