Enniko Er Pudichane (From "Kadaisi Vivasayi")

என்னைக்கோ ஏர் புடிச்சானே
நம்ம முன்னொரு மண்ணுக்கே சூடம் வெச்சானே
கொள்ளைக்கே வேலி நட்டாலும் குறைவில்லாமலே வண்டுக்கும் பாதை விட்டானே

என் மம்பட்டி எல்லாம் சேரு
அது குண்டான் வந்தான் சோறு
தொண்ட குழி நீரு
அது மண்ணு சுமந்த சாறு

அண்ணத்த வாரி தந்தானே
காணி நிலத்தை கீறி தந்தானே
வனத்த சார்ந்து இருந்தானே
உழைக்கும் ஆதி சனம் தான் சேர்ந்து இருந்தானே

யே கஞ்சி குடுத்த பூமி
பஞ்ச பூதம் நம்ம சாமி
தாலாட்டுற தாயே
விதை நெல்லுக்கு விவசாயி

வண்டுக்கும் நண்டுக்கும்
காக்கா குஞ்சுக்கும்
தூக்கனாங் குருவிக்கும்
நாத்து நட்டா சந்தோஷம்

கல்லுக்கும் சில்லுகும்
பேசும் நெல்லுக்கும்
மூச்சு இருக்கு புல்லுக்கும் காத்து அடிச்சா உரசும்

யே கன்னங்கரு ஆகாயம் வெள்ளி பொடி தூவ
பச்சை புள்ள என் காடு ஒத்துகொட சாய
சந்த கடை போனாலும்
ஏன்ன வில நான் கூற
தள்ளி விட தோணாதே என் நெல்ல

ஏ வேட்டையடி
வெள்ளாமை தான் வெளைஞ்சு கும்புடுவோம்
கும்மி அடி குனிஞ்சு
மண்ணுக்குள்ளே வேறும் சேர்த்து வைக்கும் பாரு
ஒன்னு பட்ட தானே ஊரு இழுக்கும் தேரு

ஏ கன்னங்கரு ஆகாயம் வெள்ளி பொடி தூவ
பச்சை புள்ள என் காடு ஒத்துக்கொடு சாய
சந்தக்கட போனாலும் என்ன வில நான் கூற
தள்ளி விட தோணாதே என் நெல்ல

என்னைக்கோ ஏர் புடிச்சானே
என்னைக்கோ ஏர் புடிச்சானே
என்னைக்கோ ஏர் புடிச்சானே



Credits
Writer(s): Arivarasu T. Kalainesan, M. Manikandan, Santhosh Narayanan
Lyrics powered by www.musixmatch.com

Link