Poojaikkaga Vazhum

பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ
உன் பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ
இது யார் சதியோ
இறைவன் சபையில் இது தான் விதியோ
உன் பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ

இளங்காற்றை தாங்காத பூவின் ஜாதி
இடி வீழ்ந்து சருகாதல் தானோ நீதி
இளங்காற்றை தாங்காத பூவின் ஜாதி
இடி வீழ்ந்து சருகாதல் தானோ நீதி
கோயில் என்றால் தீபம் எங்கே
தீபம் இல்லை நீ தான் எங்கே
பொங்குது மனம் இது ரகசிய ரணம்
கண்களில் குளம் அது உனதர்ப்பணம்
பொன் எழில் சிலை அது என் வசமிலை
இரு கண்களில் ராத்திரி வேதனை
இருவிழி இலையெனும் ஒரு குறை
இதுவரை இதயத்தில் எழுந்தது இல்லையே
விழிகளில் உலவிய ஒளிமகள் பிரிந்ததும்
உண்மையில் என் விழி இல்லையே
கனவு வரும்போதும் அவளின் முகதீபம்
தெரியமுடியாது திருமுகம் நினைவினில்

பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ
இது யார் சதியோ
இறைவன் சபையில் இது தான் விதியோ
உன் பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link