Naan Thedum Sevvandhi

நான் தேடும் செவ்வந்தி பூ இது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்

நான் தேடும் செவ்வந்தி பூ இது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

பறந்து செல்ல வழி இல்லயோ
பருவ குயில் தவிக்கிறதே
சிறகிறண்டும் விரித்துவிட்டேன்
இளம் வயது தடுக்கிறதேன்

பொன்மானே என் யோகம் தான்
பெண்தானோ சந்தேகம்தான்
என் தேவி
உன் விழி ஓடையில் நான் கலந்தேன்
பொன் கனி விழுமென தவம் கிடந்தேன்
பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு

நான் தேடும் செவ்வந்தி பூ இது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

மங்கைக்குல் என்ன நிலவரமோ
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ
அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ
என்றைக்கும் அந்த சுகம் வருமோ

தல்லாடும் பெண் மேகம் தான்
என்னாலும் உன் வானம் நான்
என் தேவா
தன் மலர் மூடிட ஏன் தவித்தேன்
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டு பாடாமல் தூங்காது என் பிள்ளை

நான் தேடும் செவ்வந்தி பூ இது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்

நான் தேடும் செவ்வந்தி பூ இது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link