Uyire Uyire

ஹா ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
ஆஅ ஆஆ ஆஅ ஆஆ

உயிரே உயிரின் ஒளியே
ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள்
இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள்
என்றும் வாழ்வின் உண்மைகள்

உயிரே உயிரின் ஒளியே
ஒருநாள் உறவா இதுவே

வெள்ளி நிலா
வானவெளி போவது போல்
பிள்ளை நிலா
துள்ளி இங்கு வந்ததம்மா ஹோ ஹோ

அள்ளி அள்ளி
கட்டிக்கொள்ள ஆனந்தமாய்
பிள்ளைகளின்
செல்லமொழி கேட்டதம்மா

ஒரு மர சிறு கூட்டில்
கிளி ஒன்று இல்லை
பிரிந்திட பொறுக்காது
தாய் அன்பின் எல்லை

பால் முகம் மறக்காமல்
தடுமாறும்
சேய் முகம் கண்டால்தான்
நிலை மாறும்
ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ

உயிரே உயிரின் ஒளியே
ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள்
இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள்
என்றும் வாழ்வின் உண்மைகள்

உயிரே உயிரின் ஒளியே
ஒருநாள் உறவா இதுவே

தென்றல் ஒன்று
தேகம் கொண்டு வந்தது போல்
சொந்தமொன்று மன்றமதில்
வந்தது என்ன ஹோ ஓ

சொர்க்கமொன்று
பூமி தன்னில் கண்டது போல்
இன்பங்களை தந்து விட்டு
சென்றது என்ன

துணையாய் வழி வந்து
எனை சேர்ந்த அன்பே
இனியும் உனைப் போல
இணை ஏது அன்பே

எனக்கென நீதானே
நம் வாழ்வில்
உனக்கென நான்தானே
எந்நாளும்
ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ

உயிரே உயிரின் ஒளியே
ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள்
இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள்
என்றும் வாழ்வின் உண்மைகள்
உயிரே உயிரின் ஒளியே
ஒருநாள் உறவா இதுவே



Credits
Writer(s): Ilaiyaraaja, Pirai Soodan
Lyrics powered by www.musixmatch.com

Link