Poove Sem Poove - Male

பூவே, செம்பூவே
உன் வாசம் வரும்
வாசல் என் வாசல்
உன் பூங்காவனம்
வாய்பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

பூவே, செம்பூவே
உன் வாசம் வரும்
பூவே செம்பூவே

நிழல்போல நானும்... அஅஅ
நிழல்போல நானும்
நடைபோட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல்வானம் கூட
நிறம் மாறக்கூடும்
மனம் கொண்ட பாசம்
தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே
உனக்காகத்தானே
நாள்தோறும் நெஞ்சில்
நான் ஏந்தும் தேனே
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே

வாய்பேசிடும், புல்லாங்குழல்
நீதானொரு, பூவின் மடல்
பூவே செம்பூவே
உன் வாசம் வரும்
வாசல் என் வாசல்
உன் பூங்காவனம்
வாய்பேசிடும், புல்லாங்குழல்
நீதானொரு, பூவின் மடல்

பூவே செம்பூவே
உன் வாசம் வரும்
பூவே செம்பூவே

உனைபோல நானும்
ஒரு பிள்ளை தானே
பலர் வந்து கொஞ்சும்
கிளி பிள்ளை நானே
உனை போல நானும்
மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம்
என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான்தான்
பார்த்தாலே போதும்
இந்நாளும் என்னாளும் உல்லாசமே

வாய்பேசிடும், புல்லாங்குழல்
நீதானொரு, பூவின் மடல்
பூவே செம்பூவே
உன் வாசம் வரும்
வாசல் என் வாசல்
உன் பூங்காவனம்
வாய்பேசிடும், புல்லாங்குழல்
நீதானொரு, பூவின் மடல்

பூவே செம்பூவே
உன் வாசம் வரும்
பூவே செம்பூவே



Credits
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link