Kaavalkaara Kaavalkaara

ஏ-ஏ-ஹே-ஏ-ஹே-ஏ-ஹே-ஹே
ஏ-ஏ-ஹே-ஏ-ஹே-ஏ-ஹே-ஹே
தந்தந-தந்தந-தந்தாநா
தந்தந-தந்தந-தாநா
தந்தந-தந்தந-தந்தாநா
தந்தந-தந்தந-நா

காவல்காரா காவல்காரா
காடு காக்கும் காவல்காரா
நாதியத்த நாட்டை இங்கே
யாரு வந்து காக்க போறா

ஏழை படும் பாடு
எங்களுக்கு யாரு?
இந்த நிலை மாறும்
காலம் தான் எப்பொழுது?

காவல்காரா காவல்காரா
காடு காக்கும் காவல்காரா
நாதியத்த நாட்டை இங்கே
யாரு வந்து காக்க போறா

மண்ணிலே நஞ்சை உண்டு
புஞ்சையும் கரிச காடும் உண்டு
மண்ணிலே கொட்டும் மழை
நஞ்சைக்கு மட்டுமே பெய்வதில்லே

தண்ணிக்கும் காத்துக்கும் தான்
பேதங்கள் என்பது என்றும் இல்லே
மண்ணிலே மக்களிலே
ஏற்ற இறக்கங்கள் மாறவில்லே
நாதியுமற்ற ஏழைகட்கு ஜாதி எதுக்கு?
நீதியுமற்ற நாட்டில் நாமும் வாழ்வதெதற்கு?

இது மாற நாடு தேற
நல்ல வழிதான் காட்டிடப்பா

காவல்காரா காவல்காரா
காடு காக்கும் காவல்காரா
நாதியத்த நாட்டை இங்கே
யாரு வந்து காக்க போறா

நல்ல பயிர் காப்பதற்கு
தோட்டத்துக்கும் ஒரு வேலி உண்டு
வேலியையும் தாண்டி வந்து
ஆடும் மாடும் அங்கு மேய்வதுண்டு

மனுஷன் வேலியிட்டா
ஆடு மாடு மீற நியாயம் உண்டு
வேலியே தின்பதற்கு
வேலியும் காவலும் என்னத்துக்கு?
மத்தவனுக்கு புத்தி சொல்ல புத்தியிருக்கு
தன்னை திருத்த புத்திமதி எங்க இருக்கு

இது மாற நாடு தேற
நல்ல வழிதான் காட்டிடப்பா

காவல்காரா காவல்காரா
காடு காக்கும் காவல்காரா
நாதியத்த நாட்டை இங்கே
யாரு வந்து காக்க போறா

ஏழை படும் பாடு
எங்களுக்கு யாரு?
இந்த நிலை மாறும்
காலம் தான் எப்பொழுது

காவல்காரா காவல்காரா
காடு காக்கும் காவல்காரா
நாதியத்த நாட்டை இங்கே
யாரு வந்து காக்க போறா



Credits
Writer(s): Gangai Amaren, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link